அமெரிக்காவின் தேவையை உணர்ந்து களத்தில் இறங்கிய பிரபல கார் நிறுவனம்!

கொரோனாவால் அடுத்த 2 வாரங்களில் இங்கு ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என்றும் கவலை தெரிவித்தார் ட்ரம்ப்.

Coronavirus outbreak ford motor is teaming up with General electric to produce ventilators : உலகம் முழுவதும் கொரானா வைரஸ் மிகவும் அதி தீவிரமாக பரவி வருகிறது. உலக அளவில் இந்நோய்க்கு அதிகளவில் பாதிக்கப்பட்ட நபர்களாக அமெரிக்காவின் நியூயார்க் நகரவாசிகள் இருக்கின்றனர். அவர்ளுக்கு தேவையான மருத்துவ வசதிகளை தொடர்ந்து அந்நாட்டு அரசாங்கம் செய்து வருகிறது.

மேலும் படிக்க : தடைகள் நீங்கியது… மீண்டும் அமோகமாய் விற்பனையாகும் வௌவால் கறி!

நேற்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளார். கொரோனாவால் அடுத்த 2 வாரங்களில் இங்கு ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என்றும் கவலை தெரிவித்தார். இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற போர்ட் மோட்டர் மற்றும் ஜெனரல் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனங்கள் தற்போது நோயாளிகளுக்கு தேவையான வென்டிலேட்டர் செய்வதில் அதிக முனைப்பு காட்டி வருகிறது.

அமெரிக்காவில் இதுவரை இந்த நோய்க்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தி 43 ஆயிரத்தை எட்டியுள்ளது. 2400 நபர்கள் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். ஏற்கனவே அமெரிக்காவில் இருக்கும் மருத்துவமனைகளில் போதுமான அளவு வெண்டிலேட்டர்கள் இல்லை என்ற தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் ஏப்ரல் 20ம் தேதி துவங்கி, 100 நாட்களில் சுமார் 50 ஆயிரம் வெண்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது ஃபோர்ட் நிறுவனம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

ஒரே மாதத்தில் 30 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் தயார் செய்யப்பட்டுவிடும் என்றும் உறுதி அளித்துள்ளது அந்நிறுவனங்கள். ஃபோர்டின் இந்த முடிவுக்கு வரவேற்பினை தந்த ட்ரெம்ப், மற்றொரு பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டர்ஸூம் ஓஹீயோவில் இருக்கும் லார்ட்ஸ்டவுன் தயாரிப்பு ஆலையில் வெண்டிலேட்டர்களை தயாரிக்கவும் வேண்டிக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க : டெல்லி மாநாடு சென்று திரும்பிய 1500 பேர் கண்காணிப்பு: தமிழக அரசு அறிக்கைக்கு எஸ்டிபிஐ எதிர்ப்பு

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close