Advertisment

வணக்கம் சொல்வதில் பெருமை என்ன? கைகளை கழுவுவதில் சோம்பேறி நாடு இந்தியா

கழிவறை சென்று வந்த பின்பு கைகளை கழுவும் பழக்கம் இந்தியர்களுக்கு குறைவு தான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coronavirus outbreak hand wash hygiene list India performs poor

Coronavirus outbreak hand wash hygiene list India performs poor

Coronavirus outbreak hand wash hygiene list India performs poor : கொரோனா வைரஸ் பரவுவதால் அனைவரும் அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்று அனைவரும் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். நோய் தொற்று அதிகரித்து வருவதால் பலரும் கைகளை குலுக்குவதற்கு பதிலாக வணக்கங்களை தெரிவிக்கின்றனர். இந்தியாவில் வணக்கம் செலுத்துவதை பாரம்பரியமாக பலரும் பின்பற்றி வருகின்றோம்.

Advertisment

மேலும் படிக்க : வீட்டுக்குள் இருந்தால் நோய் தொற்று குறையுமா? WHO இயக்குநர் எச்சரிக்கை

சில வெளிநாட்டு தலைவர்கள் கை குலுக்குவதற்கு பதிலாக வணக்கங்கள் செலுத்துவது சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்திய பாரம்பரியத்தை அனைவரும் பின்பற்றுகின்றனர் என்று நாம் பெருமை கொண்டோம். ஆனால் கைகளை சுத்தமாக கழுவும் நாட்டு மக்கள் யார் என்ற பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது பிர்மிங்காம் பல்கலைக்கழகம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் “கைகளை மிகவும் சுத்தமாக கழுவும் பழக்கங்களை கொண்டவர்கள் சவுதி அரேபியர்கள் என்று அறிவித்துள்ளனர். மேலும் 97% நபர்கள் சுத்தமாக தங்களின் கைகளை வைத்துள்ளனர். அவர்களை தொடர்ந்து போஸ்னியா, அல்ஜீரியா, லெபனான், பபுவா நியூ கினியா ஆகிய நாட்டு மக்கள் தங்கள் கைகளை சுத்தமாக வைக்க அதிக அக்கறை காட்டுகின்றனர்.

ஆனால் கைகளை சுத்தமாக கழுவாத நாடுகளின் பட்டியல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது அந்த ஆராய்ச்சி குழு. கழிவறை சென்றுவிட்டு வந்து கைகளை கழுவும் பழக்கமே இல்லாதவர்கள் பட்டியலில் இந்தியா 10வது இடம் பிடித்துள்ளது. சீனா முதலிடம். ஜப்பான், தென்கொரியா, நெதர்லாந்து, தாய்லாந்து, கென்யா, இத்தாலி, மலேசியா, ஹாங்காங் என்று முதல் 10 இடங்களில் இந்த நாடுகள் இடம் பெற்றுள்ளது.  பாகிஸ்தான் 16வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 25வது இடத்திலும், வங்கதேசம் 26வது இடத்திலும் உள்ளன.

மேலும் படிக்க : கொரோனா நிவாரணம் ரூ 1000: ரேஷன் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க அரசு கண்டிப்பான உத்தரவு

Coronavirus Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment