Advertisment

சீனாவில் மீண்டும் கணக்கைத் தொடங்கும் கொரோனா, 9-வது நாளாக எண்ணிக்கையை குறைக்கும் இத்தாலி

கிட்டத்தட்ட 14,400 மரணங்களை பதிவு செய்த பிரான்ஸ் நாட்டில்,தொடர்ந்து நான்காவது நாளாக, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை, குறைந்து வருவது ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சீனாவில் மீண்டும் கணக்கைத் தொடங்கும் கொரோனா, 9-வது நாளாக எண்ணிக்கையை குறைக்கும் இத்தாலி

Covid - 19 global updates

கொரோனா வைரஸ்: திங்களன்று, சீனாவில் நூற்றுக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது . இது, கடந்த ஆறு வாரங்களில் காணப்படாத தினசரி உச்சம்  என்று அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisment

publive-image

உலகளவில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   மொத்த மரணங்களின் எண்ணிக்கை 1,14,000 க்கும் அதிகம் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் வெறிச்சோடிய ஈஸ்டர் திருநாள்:  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தலில் இருக்கும் பெரும்பாலான அமெரிக்கர்கள் தங்கள் வீடுகளில் முடங்கி இருப்பதால், உயிர்ப்பு ஞாயிறு (ஈஸ்டர்) திருநாள் கொண்டாட்ட வெளிபாடு அங்கு குறைவாக இருந்தது. தேசத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22,000 ஐ தாண்டியது. 555,000க்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா உலகளவில் அதிக மரணங்களையும் சந்தித்துள்ளது.

publive-image

 

இதற்கிடையில், பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு (ஒபெக்), ரஷ்யா, பிற உற்பத்தியாளர்களையும் உள்ளடக்கிய ஒபெக் + நாடுகள், இறுதியாக இன்று, கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும் ஒப்புத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த முடிவிற்குப் பிறகு எண்ணெய் விலை பீப்பாய்க்கு 1 டாலருக்கும் அதிகமாக உயர்ந்தது. அமெரிக்காவில் 42 மாகாணங்கள் கடுமையான முடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான தேவாலயங்கள் மூடப்பட்டன.  இருப்பிபினும், பலர் தங்கள் வீட்டின் வெளியே சிலுவைகள் அமைத்து வழிபட்டன.

எண்ணெய் ஒப்பந்ததிற்கு டிரம்ப் நன்றி:  உலக எரிசக்தி சந்தையின் ஸ்திரதன்மையை நிலை நாட்டும் வகையில், மற்ற எண்ணெய் உற்பத்தி நாடுகளுடன் ஒப்பந்தம் செய்ததற்காக ரஷ்ய பிரதிநிதி விளாடிமிர் புடின், மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் ஆகியோருக்கு ஞாயிற்றுக்கிழமை டொனால்டு ட்ரம்ப் நன்றி தெரிவித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

 

13, 2020

 

பிரான்ஸ் நாட்டின்  இறப்பு எண்ணிக்கை 14,000 ஐ தாண்டியது: கொரோனா வைரஸ் தொற்று காரணாமாக, பிரான்சில் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 14,400 ஆக உயர்ந்துள்ளது.

publive-image

 

எனினும், தொடர்ந்து நான்காவது நாளாக, தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை, குறைந்து வருவது ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.  நான்கு வாரங்கள் தொடர்ச்சியான பொது முடக்கம் மற்றும் தீவிர தனிமைப்படுத்துதல் முயற்சிகள் தற்போது  பிரதிபலிப்பதாகவும் ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.

முன்னேற்றத்தைக் காணும் இத்தாலி:  இத்தாலி திங்களன்று 431 பேர் மரணமடைந்தனர். இது, மார்ச் 19 க்குப் பிறகு ஏற்பட்ட குறைவான எண்ணிக்கையாகும். தீவிர சிகிச்சை உட்பட ஒட்டுமொத்த மருத்துவமனை சேர்க்கையின் எண்ணிக்கையும் தொடர்து ஒன்பதாவது நாட்களாக, அந்நாட்டில் குறைந்து வருகிறது .

publive-image

 

இஸ்ரேலின் முன்னாள் தலைமை ரப்பி மரணம்: கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, இஸ்ரேலின் முன்னாள் தலைமை ரப்பி எலியாஹோ பக்ஷி-டோரன்,  திங்கள்கிழமை மரணத்தை தழுவினார் என்று ஜெருசலேமில் உள்ள ஷாரே ட்செடெக் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இவர் பல்வேறு சமயங்களுக்குள் ஒற்றுமைக்காக போராடியவர் எனப் பெயர் பெற்றவர்.

79 வயதான பக்ஷி-டோரன் 1993 மற்றும் 2003 க்கு இடையில் இஸ்ரேலின் செபார்டிக் தலைமை ரப்பியாக இருந்தார். 1941 இல் ஜெருசலேமில் பிறந்த இவர், இஸ்ரேலின் தலைமை ரப்பியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு 18 ஆண்டுகள்,வடக்கு துறைமுக நகரமான ஹைஃபாவின் தலைமை ரப்பியாக இருந்தார்.

ரப்பி சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் முன்பே இருந்த நிலைமைகளால் அவதிப்பட்டார், இதனால் அவரது நிலை மோசமடைந்தது என்று மருத்துவமனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Coronavirus Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment