அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் கடந்த வாரம் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல் காரணமாக பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகி இருக்கும் அதிபர் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு முறை குற்றச்சாட்டுக்கு உள்ளான முதல் அமெரிக்க அதிபர் என்ற பெயரை பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்று புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் ஜோ பைடன் வெற்றியை ஏற்றுக்கொள்ளாத ட்ரம்ப் பைடன் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுக்கள்அனைத்தும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனாலும் முயற்சி தளராக ட்ரம்ப் ஜோபைடன் வெற்றிக்கு எதிராக பேரணி நடத்த முடிவு செய்தார். ட்ரம்பின் நவடிக்கை ஒரு புறம் தொடர மறுமுனையில் ஜோபைடன் அதிபாராக பதவியேற்பதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டார்.
இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் ஜோ பைடன் வெற்றியை முறையாக அறிவிக்க தலைநகர் வாஷிடனில் உள்ள வெள்ளை மாளிகையில், செனட் சபை வாக்குகள் எண்ணப்பட்டது. அமெரிக்க அதிபராப பதவியேற்க செனட் சபை வாக்குகள் முக்கியம் என்ற நிலையில், அமெரிக்க காங்கிரஸ் வெள்ளை மாளிகையில் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வெள்ளை மாளிகையில் புகுந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள், ஊழியர்கள் மற்றும அதிகாரிகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர். இதனால் வாஷிங்டன் பெரும் பரபரப்புக்குள்ளான நிலையில், போராட்டகாரர்களை வெளியேற்ற போலீசார் துப்பாக்கிசூடு நடத்தனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், வாஷிங்டன் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
மேலும் இந்த விவகாரத்தில் டரம்ப தனது ட்விட்டர் மூலம் ஆதராவாளர்களை தூண்டிவிட்டு இத்தகைய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. தொடர்ந்து அவரது யூடியூப் சேனலும் நேற்று முடக்கப்பட்டது. இதனையடுத்து ட்ரம்பின் மீதான குற்றச்சாட்டுக்கு விசாரணையைத் தொடங்க அவசரகால அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஜோபைடனின் தேர்தல் வெற்றியை அறிவிக்கும் முறையான சான்றிதழை சீர்குலைத்து, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு, ஒரு போலீஸ் அதிகாரி உட்பட ஐந்து பேரைக் கொன்றது என பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.
அமெரிக்காவின் ஜனாதிபதி தூண்டிய இந்த கிளர்ச்சி பொதுவான நாட்டிற்கு எதிரான இந்த ஆயுதக் கிளர்ச்சி" என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹவுஸ் சபாநாயகர் நான்சி பெலோசி வாக்களிப்பதற்கு முன்பு ஹவுஸ் மாடியில் கூறினார். எந்தவொரு அமெரிக்க ஜனாதிபதியும் குற்றச்சாட்டு பாதிவு செய்த்தற்கு பின் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை. இதற்கு முன் 2019 இல் டிரம்ப், 1998 இல் பில் கிளிண்டன் மற்றும் 1868 இல் ஆண்ட்ரூ ஜான்சன் செனட் சபையால் குற்றம்சாட்டப்பட்டனர். முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரான ஜனநாயக காங்கிரஸின், ஜூலியன் காஸ்ட்ரோ, டிரம்பை "ஓவல் அலுவலகத்தை ஆக்கிரமித்த மிக ஆபத்தான மனிதர், அவர் உள்நாட்டுப் போரை விரும்புவதாக காங்கிரஸின் பெண் மாக்சின் வாட்டர்ஸ் குற்றம் சாட்டினார்.
சக ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜிம் மெகாகவர்ன், ஜனாதிபதி “ஒரு சதித்திட்டத்தைத் தூண்டியுள்ளார். மேலும் ஓஹியோ குடியரசுக் கட்சியின் ஜிம் ஜோர்டான் போன்ற டிரம்பின் நெருங்கிய கூட்டாளிகள், ஜனநாயகக் கட்சியினர் பொறுப்பற்ற முறையில் தூயமையற்ற அரசியல் நலனுக்காக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அமெரிக்க செனட் சபையில் ட்ரம்ப் மீதான விசாரணைக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும். அப்படி பெரும்பான்மை கிடைத்தாலும், ஜோபைடன் பதவியேற்பதற்கு ஒரு நாள் முன்னதாக ஜனவரி 19 அன்று செனட் வழக்கமான அமர்வில் திரும்பும் வரை எந்த விசாரணையும் தொடங்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
டிரம்ப் பதவியில் இருந்து விலகிய பிறகும் இந்த வழக்கு செனட் சபையில் தொடரும் என மெக்கனெல் தனது சக குடியரசுக் கட்சியினருக்கு எழுதிய குறிப்பில் தெரிவித்தார். தலைநகரில் நடைபெற்ற சம்பவம், அமெரிக்காவில் அரசியல் வன்முறை பற்றிய கவலைகளை எழுப்பியுள்ள நிலையில், ஜோபைடன் பதவியேற்புக்கு முன்னதாக வாஷிங்டன் உட்பட 50 அமெரிக்க மாநில தலைநகரங்களில் ஆயுத ஆர்ப்பாட்டங்கள் நடத்த ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக எஃப்.பி.ஐ எச்சரித்துள்ளது. ஆனால் டிரம்ப் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "எந்தவொரு வன்முறையும், சட்டத்தை மீறவும், எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியும் இருக்கக்கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன என தெரிவித்துள்ளார்.‘
அமெரிக்க அரசியலமைப்பின் படி, "தேசத்துரோகம், லஞ்சம் அல்லது பிற உயர் குற்றங்கள் மற்றும் தவறான செயல்களை" செய்த ஒரு ஜனாதிபதியை பதவிநீக்கத்தை செயல்படுத்த காங்கிரஸ் உதவுகிறது. டிரம்ப் நீக்கப்பட்டால், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஜனாதிபதியாகி தனது பதவிக்காலத்தை நிறைவேற்றுவார். ஆனால் ட்ரம்ப் பதவி விலகுமாறு வெளியிட்ட அரசாணைய புறக்கணித்த்தாக கூறப்படுகிறது. மேலும் அமெரிக்க தேர்தலுக்கு முன்பாக ஜோபைடன் மற்றும் அவரது மகன் ஹண்டரை உக்ரைன் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையினால், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் காங்கிரசுக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் 2019 டிசம்பரில் குற்றம் சாட்டப்பட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.