பார்சலில் வந்த வெள்ளை பவுடர்: மயங்கி விழுந்த ட்ரம்பின் மருமகள்!

பவுடர் மூலம் ஆண்ட்ராக்ஸ் கிருமி நோய் தாக்கப்பட்டவரில் 5 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மருமகள், தபாலில் வந்த வெள்ளை பவுடரால் மயங்கி விழுந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்ப் மூத்த மகன் டொனால்டு ட்ரம்ப் ஜூனியர், தனது மனைவி வெனிசா மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர்களது வீட்டிற்கு நேற்றைய தினம் தபாலில் கடிதத்துடன், வெள்ளை பவுடர் ஒன்று வந்துள்ளது. இதனைப் பெற்று ட்ரம்பின் மருமகள் வெனிசா ஆவலுடன் அதை திறந்துப் பார்த்துள்ளார். அப்போது பவுடரில் இருந்து வந்த நெடியால் அக்கணமே மயங்கி விழுந்துள்ளார்.

சத்தம் கேட்டு ஓடி வந்த, அவரின் குழந்தைகள் மற்றும் பணிப்பெண்களும் அந்த பவுடரின் நெடியால் மயங்கி விழுந்துள்ளனர். பின்னர், அவர்களை மீட்ட காவலர்கள், மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுக்குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், வெள்ளை பவுடர் ஆண்ட்ராக்ஸ் எனப்படும் கொடிய விஷ கிருமி பரப்பும் பவுடராக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ட்ரம்பின் குடும்பத்தின் மீது பகை உணர்வுக் கொண்ட யாரோ சிலர் தான் இதுப் போன்ற செயலில் ஈடுப்பட்டுள்ளதாக போலீசார்கள் சந்தேகித்துள்ளனர். இதுக் குறித்து கேள்விப்பட்டு மிகுந்த கோபம் அடைந்துள்ள ட்ரம்ப் இந்த சம்ப்வம் குறித்து விசாரிக்க இரகசிய உளவுத்துறையை நியமித்துள்ளார். மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ள வெனிசாவின் உடல் நலம் தேறி வருவதாகவும், பார்சலில் வந்த வெள்ளை பவுடரை ஆய்வுக்கு உட்படுத்தி இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெனிசா நியூயார்க்கில் ஃபேஷன் மாடலாக இருந்தவர். திருமணத்திற்கு பிறகு, குடும்ப பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை பவுடர் மூலம் ஆண்ட்ராக்ஸ் கிருமி  நோய் தாக்கப்பட்டவரில் 5 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close