இந்தியரின் உயிர் தப்புமா? இன்று பிற்பகல் பரபரப்பு தீர்ப்பு!

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து......

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு, பாகிஸ்தான் ராணுவ கோர்ட், கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி மரண தண்டனை விதித்தது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) மனுத் தாக்கல் செய்தது.

இதனை பரிசீலித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவின் மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டது. அதன்பின், மீண்டும் கடந்த 15-ந்தேதி விசாரணை தொடங்கியது. அப்போது, ஜாதவ் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்றும், கேலிக்கூத்தாக விசாரணை நடைபெற்றதாகவும் இந்தியா தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், வியன்னா ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி பாகிஸ்தான் செயல்பட்டிருப்பதால், ஜாதவை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று இந்தியா வேண்டுகோள் வைத்தது.

அதேசமயம், பாகிஸ்தான் தரப்பில், குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இந்தியாவின் முறையீடு தேவையற்றது என்றும், தவறான நோக்கம் கொண்டது என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சர்வதேச நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பினை வெளியிட உள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close