Advertisment

ரஜினியின் அரசியல் என்ட்ரி: வெளிநாட்டு பத்திரிகைகள் என்ன வெளியிட்டுள்ளன தெரியுமா?

நாடு முழுவதும், நேற்று பரபரப்பாக பேசப்பட்ட ரஜினியின் அரசியல் பிரவேசத்தை உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டுள்ளன

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth Political Entry

Rajinikanth Political Entry

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம், கழிந்த ஆண்டான 2017, டிசம்பர் 31ம் நாளின் மோஸ்ட் ஹாட் நியூஸ். அன்று மட்டுமல்ல, தமிழகத்தை பொறுத்தவரை, இனி ஏதேனும் ஒரு டப்பிங் ஆர்டிஸ்டுக்கு தொண்டை சரியில்லை என்றாலும், 'ரஜினி ஏன் இதற்கு குரல் கொடுக்கவில்லை?' என்று கேட்பார்கள். ரஜினி அரசியலுக்கு வருவதற்கு முன்னரே, அவரை வைத்து பஞ்சாயத்துகள் ஓடிக் கொண்டிருந்த நிலையில், இப்போது அவரது அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பிறகு நடக்கப் போகும் விஷயங்கள் அனைத்தும் மெகா டிபேட்டுகளுக்கு வழி வகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisment

நாடு முழுவதும், நேற்று பரபரப்பாக பேசப்பட்ட ரஜினியின் அரசியல் பிரவேசத்தை உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டுள்ளன. அதுகுறித்த சில அப்டேட்கள் இங்கே,

XINHUANET(சீனா)

'Indian actor Rajinikanth announces entry into politics' என்று அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

"இந்தியா நாட்டின் தமிழகத்தில், ரஜினிகாந்த், கடவுளின் அவதாரம் போல ரசிகர்களால் ஆராதிக்கப்படுகிறார்" எனக் குறிப்பிட்டுள்ளது.

the japan times (ஜப்பான்)

'Indian Tamil cinema superstar Rajinikanth to enter politics' என்று அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

"இந்தியாவின் சில பகுதிகளில் கடவுளைப் போல போற்றப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் நுழைவதாக அறிவித்துள்ளார்" என குறிப்பிட்டுள்ளது.

The Washington Times (அமெரிக்கா)

'Indian movie star Rajinikanth joins politics in Tamil Nadu' என்று அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

"ஜெயராம் ஜெயலலிதாவின் மறைவு மற்றும் முத்துவேல் கருணாநிதியின் அரசியல் ஓய்வால், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப, இந்திய சினிமா நட்சத்திரம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துள்ளார்" என தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

france24 (பிரான்ஸ்)

'Indian Tamil cinema superstar Rajinikanth to enter politics' என தலைப்பிட்டுள்ளது இந்த செய்தி நிறுவனம்.

இந்த நிறுவனமும், ரஜினியை 'கடவுளின் அவதாரம்' என்று குறிப்பிட்டுள்ளது.

Kaala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment