Advertisment

வலியச் சென்று கொரோனா வைரஸ் பெற்ற ஜெர்மன் மேயர் - ஏன்?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
German Mayor Infected Himself With Coronavirus On Purpose

German Mayor Infected Himself With Coronavirus On Purpose

பெர்லின் மாவட்ட மேயர் ஸ்டீபன் வான் டாஸ்ஸல், நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக தனது பார்ட்னரிடமிருந்து "வேண்டுமென்றே கொரோனா வைரஸ்" பெற்றுக் கொண்டதாக  கூறினார். ஆனால், அவர் நினைத்ததை விட நிலைமை "மிகவும் மோசமானது" என்று அவர் கூறினார்.

Advertisment

இதுகுறித்து, பெர்லின்-மிட்டேவின் மாவட்ட மேயரான திரு வான் டாஸல், கூறுகையில், "நான் நினைத்ததை விட நீண்ட காலமாக நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதற்கான நோக்கத்தினால் நான் பாதிக்கப்பட்டேன், மூன்று நாட்களுக்கு நான் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருப்பேன், பின்னர் நான் நோய் எதிர்ப்பு சக்தியாக பெற்றுவிடுவேன் என்று நினைத்தேன் - என்னால் அதை பெற முடியவில்லை. இனி, வைரஸை யாருக்கு பரப்ப மாட்டேன். கடக்க மாட்டேன் யாருக்கும், ஆனால் நான் நினைத்ததை விட இது மிகவும் மோசமாக இருந்தது, "என்று அவர் கூறினார்.

ஊரடங்கை வெற்றிகரமாக்குவது எப்படி?

53 வயதான தனது நடவடிக்கைகளை உலகெங்கிலும் உள்ள சுகாதார நிபுணர்களின் பரிந்துரைகளுக்கு எதிராகப் பாதுகாத்து, நோயிலிருந்து நீண்ட காலத்திற்கு விடுபடுவதன் முயற்சியாக பங்களிப்பு செய்தேன் என்றார்.

பின்னர் பெர்லின் மிட்டே அலுவலகத்தில் இருந்து மேயர் ஒரு அறிக்கையை ட்வீட் செய்தார், அதில், அவரது பார்ட்னர் நோய்த்தொற்றுக்கு ஆளான பின்னர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும், அவருடன் நெருக்கமான இடங்களில் வசிப்பதால், தொற்று "அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி தவிர்க்க முடியாதது" என்றும் கூறினார்.

"அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி ஒரு பொதுவான வீட்டு தனிமைப்படுத்தலில் 14 நாட்களுக்கு தொற்று ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்பதால், அதை விரைவாகப் பிடிக்க நான் முழு சம்மதத்துடன் ஏற்றுக்கொண்டேன்," என்று அவர் கூறினார்.

"ஆனால் எனது நடத்தை பொறுப்பான நோக்கத்துக்காக மேற்கொள்ளப்பட்டதே. நான் இனி தொற்று குணமடையும் வரை தனிமைப்படுத்தலில் இருப்பேன்" என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment