விதிமுறைகளை மீறியதால் 462 கோடி ரூபாய் அபராதம்... சிக்கலில் சிக்கிய கூகுள்...

பொதுத் தரவுகள் பாதுகாப்பு நெறியாண்மையை மீறிதால் நடவடிக்கை...

Google GDPR Violation France : கூகுள் நிறுவனம் ஐரோப்பாவின் பொதுத் தகவல் பாதுகாப்புக் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக பிரான்ஸ் நாடு கூகுள் மீது அபராதம் விதித்துள்ளது.  General Data Protection Regulation எனப்படும் பொதுத் தரவுகள் பாதுகாப்பு நெறியாண்மை என்ற சட்டம் ஐரோப்பா முழுவதும் அமலில் உள்ளது. தனிநபர்களின் அந்தரங்க உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த சட்டம்.

Google GDPR Violation France – 462 கோடி ரூபாய் அபராதம்

பயனர்கள் தங்களின் தகவல்களை, தனியார் நிறுவனங்கள் எங்கே பயன்படுத்துகின்றன என்று தெரிந்து கொள்ளும் வகையில் நடைமுறைகள் அங்கு வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த விதிமுறைகளை கடந்த வருடம் மே 25ம் தேதி முதல் அமலில் இருக்கிறது, குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த விதிமுறைகளை முறையாக பின்பற்றாத நிறுவனங்கள் 23.5 மில்லியன் டாலர்கள் அல்லது லாபத்தில் 5% வரை அபராதம் கட்ட வேண்டும் என்பதும் இந்த சட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் நாடு, கூகுள் நிறுவனம், மேற்கூறிய விதிமுறைகளை மீறியதாக கூறி அபராதம் விதித்துள்ளது. அதுவும் சுமார் 462 கோடி ரூபாய். ஒரு நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்ட உயர்ந்த பட்ச அபராதம் இது தான் என்கிறது ஐரோப்பிய யூனியனின் வரலாறு.

மேலும் படிக்க : வாட்ஸ்ஆப் டார்க் மோட் தான் புதிய அப்டேட்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

×Close
×Close