Advertisment

இம்ரான்கானின் பதவியேற்பு விழாவில் இந்திய பிரபலங்கள் யார் யார்?

இம்ரான் கானின் நெருங்கிய நண்பர்கள் தவிர யாருக்கும் எந்த வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் அழைப்பு இல்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
FATF China joins India, US, and European countries

FATF China joins India, US, and European countries

இம்ரான்கானின் பிரதமர் பதவியேற்பு விழா ( PM oath ceremony ):

Advertisment

இம்ரான் கானின்  PM Oath Ceremony - யில் கலந்து கொள்ள யார் யாருக்கு அழைப்பு விடப்பட்டிருக்கிறது?

டெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி அதிக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கப் போகிறது. பிரதமராக பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பதவி ஏற்க உள்ளார்.

PM Oath Ceremony -யில் கலந்து கொள்ள இருக்கும் இந்திய பிரபலங்கள்

எந்த ஒரு நாட்டிலும் பிரதமர் பதவி ஏற்பு விழாவில் ( Pakistan PM Oath ceremony ) கலந்து கொள்ள பொதுவாக உலகத் தலைவர்களை அழைப்பது வழக்கம். ஆனால் இம்ரான் கானின் பிரதமர் பதவியேற்பு விழா (Imran Khan PM oath ceremony) சற்று வித்தியாசமாக நடைபெற இருக்கிறது.

அவருடைய நெருங்கிய நண்பர்களைத் தவிர வேறு யாருக்கும் அழைப்பு இல்லையாம். முழுக்க முழுக்க ஒரு தேசிய நிகழ்வாகவே நடைபெற இருக்கிறது இந்த பிரதமர் பதவியேற்பு விழா.

இது தொடர்பாக டெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவத் சௌத்ரி குறிப்பிடுகையில், இந்நிகழ்வு ( Pakistan PM oath ceremony ) மிகவும் எளிமையாக குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்.

இதில் கலந்து கொள்ள தன்னுடைய கிரிக்கெட் வட்டாரத்தில் இருக்கும் நண்பர்களை மட்டுமே அழைத்திருக்கிறார் இம்ரான் கான்.

இந்தியாவில் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், சித்து போன்ற கிரிக்கெட் வீரர்களையும், பாலிவுட் நடிகர் அமீர் கானையும் அழைத்திருக்கிறார் இம்ரான் கான்.

இச்செய்தியினை ஆங்கிலத்தில் படிக்க 

சித்துவின் கருத்து

இந்நிகழ்வின் அழைப்பிதழை பெற்றுக் கொண்ட சித்து மகிழ்ச்சி தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் இம்ரான் கான் பெருமையாகவும் கூறியிருக்கிறார். “ இந்த அழைப்பின் மூலம் நான் மிகவும் பெருமை அடைகின்றேன். இம்ரான் மிகவும் நல்ல பண்புகளைக் கொண்ட ஒருவர். அவரை முழுமனதாக நம்பலாம். மக்களை ஒன்றிணைத்து அவர்களின் நம்பிக்கைக்காக போராடுவார் என்பதில் துளியும் சந்தேகமில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியா - பாகிஸ்தான் உறவு முறை

கடந்த சில வருடங்களாக இரு நாட்டு எல்லையிலும் பதட்டமான சூழல் நிலவி வருவதால் இரு நாட்டிற்கும் இடையே சுமூகமான உறவு நீடித்திருக்கவில்லை.

இருப்பினும் இம்ரான் கானின் வெற்றியினைத் தொடர்ந்து அவரை போனில் அழைத்து வாழ்த்துகள் கூறியிருக்கிறார் நரேந்திர மோடி.

2014ம் ஆண்டு, மோடியின் பிரதமர் பங்கேற்பு விழாவிற்கு அன்றைய பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் செரீஃப் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

Imran Khan Pakistan Pm Imran Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment