Advertisment

இலங்கை விமானப்படை வரலாற்றில் பெண் விமானிகள் நியமனம்: இந்தியா வாழ்த்து

Srilanka First two female SLAF officers : இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுசேர்க்கும் விதமாக இந்த பயற்சி உள்ளது

author-image
WebDesk
New Update
இலங்கை விமானப்படை வரலாற்றில் பெண் விமானிகள் நியமனம்: இந்தியா வாழ்த்து

இலங்கை விமானப்படையின் வரலாற்றில் முதல் முறையாக இரண்டு பெண் அதிகாரிகளை விமானிகளாக நியமிக்கப்பட்டதற்கு இந்தியா  தனது வாழ்த்துக்களை தெரிவித்தது.

Advertisment

ஏ.டி.பி.எல். குணரத்ன மற்றும் ஆர்.டி. வீரவர்தன ஆகியோரை விமானப் படையில் விமானிகளாக நியமித்திருப்பது இலங்கைக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும் மகிழ்ச்சியைத் தருகிறது என்று கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்தது

"இரு அதிகாரிகளும் ஹைதராபாத்தில் உள்ள துன்டிகல் விமானப் படை அகாடமியில், 2018 ஜூலை முதல் 2019 ஜூன் வரை விமானப்படை பயிற்சி பெற்றனர்" என்றும்  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுசேர்க்கும் விதமாக இந்த பயற்சி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை விமானப்படையில் நியமிக்கப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளுக்கு இலங்கை அதிபர் கோத்தகையா ராஜபக்சே தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

திருகோணமலையில் உள்ள இலங்கை விமானப்படை சீனத் துறைமுக முகாமில் நடந்த விழாவில், விமானத்தை செலுத்துவதற்கான உத்தியோகப்பூர்வ சின்னம் இந்த இரண்டு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.

Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment