Advertisment

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: சிங்கப்பூரில் தமிழக வம்சாவளி மனநல மாற்றுத்திறனாளிக்கு மரண தண்டனை

போதைப்பொருள் வழக்கில் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த மலேசியரான மனநல மாற்றுத் திறனாளிக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததையடுத்து, அவர் இன்று காலை சிங்கபூரில் தூகிலிடப்பட்டார்.

author-image
WebDesk
New Update
Nagaenthran Dharmalingam execution in drug case in Singapore, Singapore Court, Singapore Executes Indian Origin Man, சிங்கப்பூர், போதைப்பொருள் வழக்கு, தமிழக வம்சாவளி மனநல மாற்றுத்திறனாளிக்கு மரண தண்டனை, இந்திய வம்சாளி நாகேந்திரன் தர்மலிங்கம் தூக்கு தண்டனை, மலேசியா, Sigapore Drugs Case,Indian Origin Malaysian Man Nagaenthran Dharmalingam

மலேசிய குடிமகனான நாகேந்திரன் தர்மலிங்கம் தமிழ் வம்சாளியைச் சேர்ந்தவர். இவர் மனவளர்ச்சி குன்றிய மனநல மாற்றுத்திறனாளி. இவர் 2009 ஆம் ஆண்டு மலேசியா தீபகற்பத்தின் காஸ்வே இணைப்பு வழியாக சிங்கப்பூருக்குள் நுழையும்போது உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில், அவருடைய தொடையில் மறைத்து வைத்திருந்த போதைப்பொருள் உடன் பிடிபட்டார். 34 வயதான நாகேந்திரன் தர்மலிங்கம், 2009ஆம் ஆண்டு 42.72 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கொண்டுவந்த குற்றத்திற்காக சிங்கப்பூர் நீதிமன்றம் அவருக்கு 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மரண தண்டனை விதித்தது.

Advertisment

இந்த போதைப் பொருள் கடத்தல் வழக்கில், தமிழக வம்சாவளியைச் சேர்ந்த மலேசியரான மனநல மாற்றுத் திறனாளி நாகேந்திரன் தர்மலிங்கத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

நாகேந்திரன் தர்மலிங்கத்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து அவருடைய தாயார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. வடக்கு மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் நீதிமன்றத்துக்கு வந்த நாகேந்திரனின் தாய், தனது மகனைக் காப்பாற்றக் கோரி கடைசி நிமிடத்தில் முறையிட்டும் அவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழ்நாடு வம்சாவளியைச் சேர்ந்த மலேசிய குடிமகனான நாகேந்திரன் தர்மலிங்கம், சிங்கப்பூரில் இன்று காலை தூக்கிலிடப்பட்டார் என்று அவருடைய குடும்பத்தினர் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

நாகேந்திரன் தர்மலிங்கம் மீதான குற்றம் 2010-இல் உறுதி செய்யப்பட்டது. அனைத்து சட்ட ரீதியான வாதங்களும் முடிந்துவிட்ட நிலையில், அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முதலில், அவரை கடந்த ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி தூக்கிலிடப்படுவதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், அவர் கடைசி நேரத்தில் ஒரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

தமிழக வம்சாவளியைச் சேர்ந்த மனநல மாற்றுத் திறனாளியான நாகேந்திரன் தர்மலிங்கத்தின் மரணை தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்ப்பட்ட மனு இந்த கடைசி நிமிட விண்ணப்பமானது திட்டமிடப்பட்ட மரணதண்டனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்பு 2011 இல் மேல்முறையீட்டு மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இது நாகேந்திரன் தர்மலிங்கத்தின் 7வது மேல்முறையீட்டு விண்ணப்பம். சமீபத்திய முயற்சி நீதிமன்றத்தின் செயல்பாடுகளை துஷ்பிரயோகம் செய்வதற்கான முயற்சியாகும். மேலும், இது நாகேந்திரனுக்கு விதிக்கப்பட்ட சட்டப்பூர்வ தண்டனையை நடைமுறைப்படுத்துவதை நியாயமற்ற முறையில் தாமதப்படுத்துகிறது” என்று சிங்கப்பூர் அரசின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட தமிழக வம்சாவளியைச் சேர்ந்த நாகேந்திரன் தர்மலிங்கத்தின் உடலை வடக்கு மலேசியாவில் உள்ள ஈப்போ நகருக்கு எடுத்துச் செல்லப்படும் என்று அவருடைய சகோதரர் நவீன் குமார் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu India Malaysia Singapore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment