ஈரானில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 12 பேர் பலி! ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு!

ஈரான் பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட பயங்கவரவாத தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

ஈரான் பாராளுமன்றம் மற்றும் அந்நாட்டின் புரட்சியாளர் ருஹொல்லா கொமெய்னி நினைவிடத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் போது 12 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ள. மேலும், 30-பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த இரட்டை தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.

×Close
×Close