Advertisment

உருமாறி வரும் கொரோனா.. இந்தியத் தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்.. மேலும் டாப் 5 உலகச் செய்திகள்

புதிய வகை கொரோன வைரஸ் உருவாக வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.கொரோனா வைரஸ் டெல்டா, ஒமைக்ரான் என தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது.

author-image
WebDesk
New Update
உருமாறி வரும் கொரோனா.. இந்தியத் தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்.. மேலும் டாப் 5 உலகச் செய்திகள்

முடிவுக்கு வராத கொரோனா பரவல்: அச்சத்தில் உலக நாடுகள்

Advertisment

சீனாவில் தொடங்கிய கொரோனா இன்னமும் தனது கோர தாண்டவத்தை நிறுத்திக் கொள்ளாமல் உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.  கொரோனா பரவலால் பொதுமக்கள் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், வைரஸ் புதிது புதிதாக உருமாற்றமடைந்து மருத்துவ உலகத்துக்கு சவால் அளித்து வருகிறது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 கோடியே 34 லட்சத்து 36 ஆயிரத்து 934 ஆக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 45 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 90 ஆயிரத்து 201 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 32 கோடியே 30 லட்சத்து 51 ஆயிரத்து 106 பேர் குணமடைந்துள்ளனர்.  எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 57 லட்சத்து 94 ஆயிரத்து 633 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈராக்கில் வான்வழி தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி

ஈராக்கில் ஐ.எஸ். நிலைகளை குறி வைத்து ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஈராக்கில் கடும் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்க படைகளின் உதவியோடு தோற்கடிக்கப்பட்டனர்.

ஆனால் சமீபகாலமாக அங்கு மீண்டும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கை ஓங்கி வருகிறது. குறிப்பாக நாட்டின் வடக்கு பகுதிகளில் அவர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளனர்.

அவர்களை ஒடுக்க ராணுவம் தீவிரமாக போராடி வருகிறது. அந்த வகையில் வடக்கு மாகாணம் நினிவேவில் உள்ள ஹத்ரா பாலைவனத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ராணுவம் அதிரடி வான்தாக்குதல் நடத்தியது.

இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்களின் தலைமையகமாக பயன்படுத்தி வந்த 140 மீட்டர் நீளம் கொண்ட குகை குண்டு வீசி அழிக்கப்பட்டது. மேலும் இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 7 பேர் கொல்லப்பட்டனர்.

ஹிஜாப் விவகாரம்; இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் அரசு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பி, கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதற்கு முஸ்லிம் மாணவர்களுக்கு தடை விதித்துள்ளதற்கு வருத்தம் தெரிவித்தது. அத்துடன், கண்டனமும் தெரிவித்து உள்ளது. 

இந்தச் செய்தியை டெய்லி பாகிஸ்தான் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பின்னணி: கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர்  கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.  ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள் காவி துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்தால் காவி துண்டு அணிந்த எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கல்லூரிகளில் பதற்றமான சூழல் நிலவியது.  இதனை தொடர்ந்து, கர்நாடகத்தில் 3 தினங்களுக்கு  அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

ஹிஜாப் அணிய அனுமதி கோரி முஸ்லிம் மாணவிகள் தொடர்ந்த வழக்கில் இடைக்கால உத்தரவிட மறுத்த ஐகோர்ட்டு, வழக்கு விசாரணையை தலைமை நீதிபதிக்கு மாற்றி அறிவித்துள்ளது.

புதிய வகை கொரோனா உருவாக வாய்ப்பு - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

புதிய வகை கொரோன வைரஸ் உருவாக வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமைக்ரான் என தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது.

இதுகுறித்து அந்த அமைப்பின் கொரோனா தொழில்நுட்பக்குழுவின் தலைவர் மரியா வான்கோவ் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் மேலும் உருமாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

ஒமைக்ரான் வைரஸ் கவலைக்குரிய மாறுபாடு. இது கடைசி உருமாற்றமாக இருக்காது. அடுத்தது உங்களுக்கு தெரியும். அது பரவ சிறிது காலம் அவகாசம் எடுக்கும்.

பிஏ.1 வைரசை விட பிஏ.2 வைரஸ் அதிகமாக பரவக்கூடியது. எனவே உலகம் முழுவதும் இந்த பிஏ.2 வைரஸ் கண்டறியப்படுவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் கூறினார்.

இதனால் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ்கள் உருவாக வாய்ப்பு இருக்கிறது என்பது தெளிவாகி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Coronavirus Who World News Isis
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment