ஒட்டுமொத்த உலகத்தையும் நெகிழ வைத்த சம்பவம்!

பசியில் துடித்த அந்த குழந்தைக்கு உலா, புட்டிப் பால் கொடுக்க முயன்றுள்ளார். ஆனால்....

இஸ்ரேல் நாட்டில், பாலஸ்தீன பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். இதில், அவரின் கணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்தப் பெண் படுகாயத்துடனும், அவரது பச்சிளங் குழந்தை சிறிய காயங்களுடனும் உயிர் தப்பினர்.

படுகாயமடைந்த அப்பெண் ‘ஹதாஸ் எலின் கிரீம்’ என்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் குழந்தை, அந்த மருத்துவமனையில் பணிபுரியும் உலா என்ற நர்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது. பச்சிளங்குழந்தை என்பதால் பசி தாங்காமல் அழத் தொடங்கிவிட்டது. குழந்தையின் தாய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததால், அவரால் தாய்பால் கொடுக்க முடியாத சூழல் இருந்தது.

பசியில் துடித்த அந்த குழந்தைக்கு உலா, புட்டிப் பால் கொடுக்க முயன்றுள்ளார். ஆனால் குழந்தை குடிக்க மறுத்துவிடவே, அவரே அந்த குழந்தைக்கு பாலூட்டியுள்ளார். இந்த காட்சியைப் பார்த்த குழந்தையின் உறவினர்கள் கண்கலங்கி உலாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் யூத இனத்தவரான உலா, பாலஸ்தீன பெண்ணின் குழந்தைக்கு பாலூட்டிய சம்பவம் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்தப் புகைப்படமும் நெட்டிசன்களால் வைரல் ஆகியுள்ளது.

×Close
×Close