Advertisment

No.1 பணக்காரர் அந்தஸ்திற்கு செக் வைத்த விவாகரத்து... கோடிக்கணக்கில் சொத்துகளை இழக்கும் அமேசான் நிறுவனர்...

பெசோஸ் - மெக்கன்சி இணையருக்கு ஒரு தத்துக் குழந்தை உட்பட நான்கு குழந்தைகள் உள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jeff Bezos Divorces MacKenzie

Jeff Bezos Divorces MacKenzie

Jeff Bezos Divorces MacKenzie : உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் அமேசான் வர்த்தக இணைய சேவையின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ். 1993ம் ஆண்டு, மெக்கென்சி என்ற நாவலாசிரியரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அமேசான் நிறுவனத்தை தொடங்கினார் ஜெஃப்.

Advertisment

தன்னுடைய நண்பரின் முன்னாள் மனைவியை காதலித்து வருவதாக ஜெஃப் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. லாரன் சான்செஸ் என்ற 49 வயதான அப்பெண், செய்தியாளர், பைலட், மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார்.

Jeff Bezos Divorces MacKenzie

ப்ளூம்பெர்க்கின் பணக்காரப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் பெசோஸ்சின் மொத்த சொத்த மதிப்பானது 137 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.  பெசோஸிற்கும் மெக்கென்சிக்கும் இடையேயான உறவு முறிவு பெற்றுவிட்டதாக தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளங்களில் செய்தி தெரிவித்துள்ளனர்.

ஜீவனாம்சம் அல்லது சொத்துப்பங்கீடு என்ற நிலை ஏற்பட்டால், உலக பணக்காரர்களின் பட்டியலில் பெரும் மாற்றங்கள் உருவாகும். சொத்துகள் சரி பங்காக பிரிக்கப்படும் என்றால் உலகின் பணக்கார பெண் என்ற பேரினை பெருவார் மெக்கென்சி. அவர்களின் சொத்துப் பிரச்சனை பற்றிய முழு விபரமும் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் உலகின் மிகவும் காஸ்ட்லியான விவாகரத்தாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெசோஸ் - மெக்கன்சி இணையருக்கு ஒரு தத்துக் குழந்தை உட்பட நான்கு குழந்தைகள் உள்ளனர். கடந்த வருடம் தான் இந்த ஜோடி தங்களின் 25வது திருமண நாளை கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : கன்னம் சுருங்கிட நீயும், மீசை நரைத்திட நானும்… 72 ஆண்டுகள் பிரிவுக்கு பின் சந்தித்த காதல்

Amazon Jeff Bezos
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment