Advertisment

கமலா ஹாரிஸ் எட்டிய உயரம் - குடும்பம் அவரை செதுக்கியது எப்படி?

அவரது குடும்பத்தில் உள்ள அனைத்து பெண்களும் வலுவான ஆளுமைகள்

author-image
WebDesk
New Update
கமலா ஹாரிஸ் எட்டிய உயரம் - குடும்பம் அவரை செதுக்கியது எப்படி?

தாத்தா, சகோதரி, தாய் மற்றும் பாட்டியுடன் கமலா ஹாரிஸ். 1972ல் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

By: New York Times

Advertisment

செனட்டர் கமலா ஹாரிஸின் குழந்தை பருவ நினைவுகளில் ஒன்று, தனது இந்திய தாத்தாவுடன் கையில் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தது.

அவரது தாத்தா பி.வி. கோபாலன், இந்திய அரசாங்கத்தில் பல தசாப்தங்களாக பணியாற்றியவர். கிட்டத்தட்ட ஒவ்வொரு காலையிலும், சென்னையில் கடலோரப் பகுதியான பெசன்ட் நகரில் கடற்கரையில் வாக்கிங் சென்று, ஓய்வுபெற்ற தனது நண்பர்களைச் சந்தித்து, அரசியல் பேசுவது அவரது வாடிக்கை. சம உரிமை, ஊழல் மற்றும் இந்தியா செல்லும் திசையைப் பற்றி அவர்கள் விவாதித்தனர்.

"அவர்கள் சொல்லும் கதைகள் மற்றும் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அவர்கள் பேசிய ஆர்வம் எனக்கு நினைவிருக்கிறது" என்று ஹாரிஸ் 2018ல் நடந்த இந்திய-அமெரிக்க மக்கள் கூட்டத்தில் தெரிவித்தார். "என் வாழ்க்கையில் அந்த தருணங்களை நான் பிரதிபலிக்கையில், நான் இன்று யார் என்பதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறேன் - அந்த நேரத்தில் நான் அதை அறிந்திருக்கவில்லை. ஆனால் பெசண்ட் நகரில் என் தாத்தாவுடன் கடற்கரையில் நடந்து சென்றது, இன்று நான் யார் என்பதில் ஆழமாக பிரதிபலித்திருக்கிறது" என்றார்.

10 மடங்கு அதிகமாய் பரவும் கொரோனா வைரஸ்… மலேசியாவில் அதிர்ச்சி அளிக்கும் ஆராய்ச்சி

ஒரு கறுப்பினப் பெண்ணாக தனது அனுபவத்தை விட ஹாரிஸ் தனது இந்திய பாரம்பரியத்தைப் பற்றி மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டிருந்தாலும், அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்வுக்கான அவரது பாதை அவரது இந்திய தாய், அவரது இந்திய தாத்தா மற்றும் அவரது பரந்த இந்திய குடும்பத்தின் மதிப்புகளால் வழிநடத்தப்பட்டுள்ளது. 8,000 மைல்கள் தொலைவில் இருந்து கூட அவர்கள் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.

அவரது தாத்தா, கோக்-பாட்டில் கண்ணாடிகளை அணிந்துகொண்டு, கழுத்தில் சால்வை அணிந்து உலா வரும்போதும், பல மேல்தட்டு இந்திய மனிதர்களைப் போல தோற்றமளித்திருக்கலாம். ஆனால் அவர் தனது சகாப்தத்தின் பழமைவாதங்களை கடந்து, பொதுச் சேவையில் ஒரு முற்போக்கான கண்ணோட்டத்தை உருவாக்கி, பெண்களுக்கு எல்லையற்ற ஆதரவைக் கொடுத்தார், குறிப்பாக அவர்களின் கல்விக்கு.

1950 களின் பிற்பகுதியில் இளமையாகவும் தனியாகவும் அமெரிக்காவிற்கு வந்த ஹாரிஸின் தாயார் ஷியாமலா கோபாலன் மீது அவர் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தினார், மேலும் 2009 இல் புற்றுநோயால் இறப்பதற்கு முன் மார்பக புற்றுநோய் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்தார்.

ஹாரிஸ் தனது தாயின் குடும்பத்தினருடன் நெருக்கமாக இருக்கிறார் - சான் பிரான்சிஸ்கோ, சேக்ரமெண்டோ அல்லது வாஷிங்டனில் அவர் போராடிய தருணங்கள் பற்றி அவரது அத்தைகள் மற்றும் மாமா இந்தியாவில் உள்ள தங்கள் வீடுகளில் இருந்து மணிக்கணக்கில் பேசலாம்.

புதுடில்லியில் வசிக்கும் அவரது மாமா ஜி. பாலச்சந்திரன், கலிபோர்னியாவில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு சான் பிரான்சிஸ்கோவின் மாவட்ட வழக்கறிஞராக கமலா ஹாரிஸ் இருந்தபோது, ​​ஒரு போலீஸ் அதிகாரியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு மரண தண்டனையை பெற்றுத் தராததற்காக கடும் எதிர்ப்பை எதிர்கொண்டதாக நினைவு கூர்ந்தார். மரண தண்டனையைப் பொறுத்தவரை அங்கு நிலவும் இன ஏற்றத்தாழ்வுகளை ஹாரிஸ் எதிர்த்தார். போலீஸ் அதிகாரிகள் மற்றும் மாநிலத்தின் சில உயர் அரசியல்வாதிகளின் கடுமையான அழுத்தம் இருந்தபோதிலும், ஹாரிஸ் பின்வாங்கவில்லை.

"அவள் அந்த தைரியத்தை தன் தாயிடமிருந்து பெற்றாள்," என்று அவரது மாமா கூறினார்.

கலிஃபோர்னியா அட்டர்னி ஜெனரலுக்கான போட்டியின் போது, ​​ஹாரிஸ் சென்னையில் உள்ள தனது அத்தை சரளா கோபாலனை தொடர்பு கொண்டு, பெசண்ட் நகர் கடற்கரையில் அவள் சிறு வயதில் வாக்கிங் செல்லும் இடத்தில் உள்ள ஒரு இந்து கோவிலில், தனது அதிர்ஷ்டத்திற்காக வேண்டிக் கொண்டு தேங்காய்களை உடைக்கும்படி கேட்டார்.

அத்தை கமலாவுக்காக 108 தேங்காய்களை உடைத்தார். "அந்த நிகழ்வை ஏற்பாடு செய்ய ஒரு நாள் முழுவதும் ஆனது," என்று அவர் கூறினார். அந்த தேர்தலில் ஹாரிஸ் மிகச்சிறிய வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.

அந்த கடற்கரை இப்போது மூடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, நாட்டின் பெரும்பகுதி இன்னும் லாக் டவுனில் இருக்கும் நிலையில், ஹாரிஸ் மிகவும் அன்பாக நினைவில் வைத்திருக்கும் சூழல்கள் இப்போது பாழடைந்திருக்கின்றன.

அவருக்கு இந்தியாவில் சில எதிர்ப்பாளர்கள் உள்ளனர். ஆனால் நாடு முழுவதும் அவர் மகத்தான பெருமையைக் கொண்டு வருகிறார். குறிப்பாக கடற்கரை சமூகத்தில் அவர் தனது வேர்களைக் கண்டறிவார்.

நயாகரா நீர் வீழ்ச்சியில் பட்டொளி வீசிய இந்தியக் கொடியின் மூவர்ணம்!

"அந்த குடும்பத்திற்கு என மாசற்ற நற்பெயர் இருந்தது" என்று ஓய்வுபெற்ற மருத்துவர் என். வியாஸ் கூறினார்.

கதவோரம் நின்றுக் கொண்டிருந்த வியாஸின் மனைவியும், ஓய்வுபெற்ற டாக்டருமான ஜெயந்தியும், புன்னகையுடன் தலையை ஆட்டினர்.

"நாங்கள் ஆச்சரியப்படவில்லை," ஹாரிஸ் ஒரு பெரிய யு.எஸ். கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு முதல் பெண்மணியாக அறிவிக்கப்பட்டதைப் பற்றி அவர் கூறினார்.

"பாருங்க, அவரது குடும்பத்தில் உள்ள அனைத்து பெண்களும் வலுவான ஆளுமைகள்," என்று அவர் கூறினார். "இவர்கள் தாம் என்ன பேசுகிறோம், என்ன சொல்கிறோம் என தெரிந்த பெண்கள்" என்றார்.

கோபாலன் கதை சென்னையின் தெற்கே பைங்கநாடு என்ற ஒரு சிறிய கிராமத்தில் தொடங்கியது, அங்கு ஹாரிஸின் தாத்தா 1911 இல் பிறந்தார். இந்தியாவின் சாதி முறையைப் பொறுத்தவரை, அவர்கள் உச்சம் கொண்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தமிழ் பிராமணர்கள், TamBrahms என்று அழைக்கப்படும் ஒரு உயர்கலாச்சாரம் கொண்டவர்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Kamala Harris
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment