Advertisment

குவைத் புதிய மசோதா: 8 லட்சம் இந்தியர்களை திருப்பி அனுப்பும் அபாயம்

குவைத்தில் வெளிநாட்டினருக்கான ஒதுக்கீட்டு மசோதா அரசியலமைப்புச் சட்டமாக்கப்பட்டால் குவைத்தில் இருந்து சுமார் 8 லட்சம் இந்தியர்கள் திருப்பி அனுப்ப வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kuwait expat bill, indians in kuwait, kuwait news, குவைத், குவைத் வெளிநாட்டினர் மசோதா, 8 lakh indian could be foced to leave gulf state, 8 லட்சம் இந்தியர்கள் வெளியேற்றும் அபாயம், kuwait expats, indian population in kuwait

kuwait expat bill, indians in kuwait, kuwait news, குவைத், குவைத் வெளிநாட்டினர் மசோதா, 8 lakh indian could be foced to leave gulf state, 8 லட்சம் இந்தியர்கள் வெளியேற்றும் அபாயம், kuwait expats, indian population in kuwait

குவைத்தில் வெளிநாட்டினருக்கான ஒதுக்கீட்டு மசோதா அரசியலமைப்புச் சட்டமாக்கப்பட்டால் குவைத்தில் இருந்து சுமார் 8 லட்சம் இந்தியர்கள் திருப்பி அனுப்ப வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

Advertisment

குவைத் தேசிய சட்டமன்றத்தின் சட்டம் மற்றும் சட்டமன்றக் குழு வெளிநாட்டினருக்கான ஒதுக்கீட்டு வரைவு மசோதாவை அரசியலமைப்பு சட்டமாக்க தீர்மாணித்துள்ளது என்று குவைத் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மசோதா உரிய குழுவுக்கு மாற்றப்பட்டு ஒரு விரிவான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவின் படி, குவைத்தில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை இந்திய மக்கள் தொகையில் 15 சதவீதத்தை தாண்டக்கூடாது. இதன் விளைவாக 8 லட்சம் இந்தியர்கள் இந்த வளைகுடா நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. ஏனெனில், குவைத்தில் இந்திய சமூகம் மொத்தம் 1.45 மில்லியன் அளவில் வசிக்கும் மிகப்பெரிய வெளிநாட்டினராக உள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து, குவைத்தில் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைக்க சட்டமியற்றுபவர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் அழைப்பு விடுத்து வருகின்றனர். இதனால், குவைத்தில் வெளிநாட்டினர் எதிர்ப்பு சொல்லாடல் அதிகரித்துள்ளது. கடந்த மாதம், குவைத்தின் பிரதமர் ஷேக் சபா அல் காலித் அல் சபா, வெளிநாட்டினரின் எண்ணிக்கையை 70 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்க முன்மொழிந்தார்.

குவைத்தின் தற்போதைய மக்கள் தொகை 4.3 மில்லியனாக உள்ளது. குவைத் நாட்டினரின் மக்கள் தொகை 1.3 மில்லியனாக உள்ளனர். இதில் வெளிநாட்டவர்கள் மக்கள் தொகை 3 மில்லியனாக உள்ளனர்.

குவைத்தில் வெளிநாட்டினர் வசிக்கும் அளவை தீர்மாணிக்கும் குவைத்தின் புதிய மசோதா சட்டமானால் அந்நாட்டில் இருந்து சுமார் 8 லட்சம் இந்தியர்கள் திருப்பி அனுப்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment