சீனாவில் கடும் நிலச்சரிவு; 100-க்கும் மேற்பட்டோர் மரணம்?

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஷின்மோ எனும் கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலை அடிவாரத்தில் உள்ள அந்த கிராமத்தில் ஏற்பட்ட இந்த திடீர் நிலச்சரிவில், 40 வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்துள்ளன. அந்த வீடுகளில் வசித்து வந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்தனர். இவர்கள் அனைவரும் உயிரிழந்து இருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதியில் மீட்பு பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close