லண்டனில் பயங்கரவாத தாக்குதல்... பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு!

தாக்குதல் நடத்திய 3 பேரை போலீஸார் சுட்டுக்கொன்றனர்

லண்டனில் நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. மேலும், 48-பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்திய 3 பேரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

உலகளவில் மிக பிரபலமானது லண்டன் ப்ரிட்ச். அப்பகுதியில் தாறுமாறாக சென்ற வேன் ஒன்று பொதுமக்கள் நிறைந்த பகுதியில் புகுந்தது. பின்னர் காரில் இருந்து இறங்கிய அந்த நபர்கள் கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு அங்குள்ள போரா மார்க்கெட் பகுதியில் ஓடியுள்ளனர்.

அப்போது கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் அந்த நபர்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். போலிஸ்காரர் ஒருவருக்கும் இந்த தாக்குதலின் போது கத்திக்குத்து ஏற்பட்தாக கூறப்படுகிறது. இதையடுத்து தாக்குதல் நடத்திய 3 பேரை போலீஸார் சுட்டுக்கொன்றனர்.

இந்நிலையில், பலி எண்ணிக்கை தற்போது 7-ஆக உயர்ந்துள்ளது. 48-பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

×Close
×Close