அதி வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்: மலேசியாவில் கண்டுபிடிப்பு

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் படி டி614ஜி வகை வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என கூறப்பட்டுள்ளது

கொரொனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் இந்நோய்க்கு தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மலேசியாவில் D614G’ என்னும் புதிய வகை கொரோனா வைரஸ் ஸ்ட்ரெய்ன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தவகை கொரோனா தற்போது இருக்கும் கொரோனா வைரஸை காட்டிலும் பல மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது என மலேசிய சுகாதார துறை இயக்குனர் நூர்ஹிஷாம் அப்துல்லா அறிவித்துள்ளார்.

இந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருந்து வந்தவர்களிடம் தொற்றிய வைரஸில் எடுக்கப்பட்ட ஸ்ட்ரெயினில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் இவ்வாறு தெரிவிக்கின்றன. ஆனால் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் படி டி614ஜி வகை வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என கூறப்பட்டுள்ளது. மேலும் செல் ப்ரெஸ் ஆய்விதழின் அறிவிப்பும், மியூடேஷன்கள் தடுப்பூசிகளால் கட்டுப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

மலேசியாவில் இதுவரை கொரோனா வைரஸிற்கு 9212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 8876 நபர்கள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 125 நபர்கள் இதுவரை அந்நாட்டில் கொரோனா வைரஸூக்கு பலியாகியுள்ளனர்.

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Malaysia detects new strain of covid19 d614g which spreads 10 times faster

Next Story
நயாகரா நீர் வீழ்ச்சியில் பட்டொளி வீசிய இந்தியக் கொடியின் மூவர்ணம்!Niagara Falls illuminated with Indian Tricolor on 74th Independence day of the nation
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com