மான்செஸ்டர் குண்டு வெடிப்பு: இளைஞரை கைது செய்தது போலீஸ்!

இந்த மோசமான தாக்குதலின் போது 22 பேர் உயிரிழந்தனர்

By: Updated: May 23, 2017, 08:00:33 PM

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவரை அந்நாட்டு போலீஸார் கைது செய்துள்ளனர்.

மான்செஸ்டர் நகரில் உள்ள மைதானம் ஒன்றில், அமெரிக்க இசைக் கலைஞர் அரியானா கிராண்டேவின் இசை நிகழ்ச்சி நடந்தது. அந்நிகழ்ச்சி முடிந்தவுடன் அங்கு திடீரென குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. உள்ளூர் நேரப்படி நேற்றிரவு நடத்தப்பட்ட இந்த மோசமான தாக்குதலின் போது 22 பேர் உயிரிழந்தனர், 59 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில், குண்டு வெடிப்பு தொடர்பாக 23-வயதான இளைஞர் ஒருவரை அந்நாட்டு போலீஸார் கைது செய்துள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட 12 மணிநேரத்திற்குள்ளாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டானது வீட்டில் இருந்து தயாரிக்கப்பட்டது என பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும், குண்டு வெடிப்பு சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் முன்னதாக கூறும்போது, போல்ட் மற்றும் நட்டு ஆகியவற்றை சம்பவ இடத்தில் பார்த்தாக தெரிவித்தனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து சுமார் 400 போலீஸார் நேற்றிரவு முதல் தேடுதல் வேட்டையில் இறங்கினர். மேலும், குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த பகுதியில் இருந்த பொதுமக்களால் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ ஆகிவற்றைக் கொண்டும் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Manchester arena terror attack 23 year old man arrested says uk police

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X