Advertisment

நியூயார்க்கின் உலக வர்த்தக மையம் அருகே தீவிரவாத தாக்குதல்: 8 பேர் பலி!

விபத்தை ஏற்படுத்திய அந்த தீவிரவாதி, வாகனத்திலிருந்து வெளியே குதித்த போது போலீசாரால் சுடப்பட்டார். அப்போது அவரது கையில் இரு போலி துப்பாக்கிகள் இருந்துள்ளன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நியூயார்க்கில் தீவிரவாத தாக்குதல், உலக வர்த்தக மையம்

நியூயார்க்கில் தீவிரவாத தாக்குதல், உலக வர்த்தக மையம்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தின் அருகில் இருக்கும் சைக்கிளுக்கான பாதையில், தீவிரவாதி ஒருவர் வாகனத்தைக்கொண்டு மோதியுள்ளார். இந்த விபத்து காரணமாக குறைந்தது எட்டு பேர் பலியாகி இருக்கலாம் என்றும், 11 பேர் காயமடைந்து இருக்கலாம் என்றும் நியூயார்க் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisment

விபத்தை ஏற்படுத்திய அந்த தீவிரவாதி, வாகனத்திலிருந்து வெளியே குதித்த போது போலீசாரால் சுடப்பட்டார். அப்போது அவரது கையில் இரு போலி துப்பாக்கிகள் இருந்துள்ளன. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், 29 வயதான அந்த நபரின் பெயர், சைஃபுலோ சைபோவ் என்றும், உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. அந்த நபர் வாகனத்தை விட்டு கீழே இறங்கிய போது, "அல்லாஹூ அக்பர்" (கடவுள் பெரியவர்) என்று சத்தமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டரில், "நியூயார்க் நகரத்தில் மிகவும் ஆபத்தான மனிதரால் இன்னொரு விபத்து ஏற்பட்டுள்ளது. சட்ட அமைப்புகள் இந்த விஷயத்தைக் கூர்ந்து கவனித்துவருகின்றன. இது அமெரிக்காவில் நடக்கக்கூடாது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை மீண்டும் முளைக்கவோ நம் நாட்டுக்குள் வரவோ அனுமதிக்கக்கூடாது. அவர்களை நாம் மத்திய கிழக்கில் வீழ்த்தியுள்ளோம். இதோடு போதும். என் எண்ணங்களும் ஆழ்ந்த இரங்கல்களும் பிரார்த்தனைகளும் இந்தத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கிறது. கடவுளும் இந்த நாடும் உங்களோடு இருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "நியூயார்க் நகரத்தில் நடத்தப்பட்டுள்ள இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடுமையாக கண்டனத்தை பதிவு செய்கிறேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்காகவும், காயம் அடைந்திருப்பவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்" என்றார்.

தாக்குதல் நடத்திய அந்த நபர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Us President Donald Trump
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment