மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாவீரர் தினத்தை தடை செய்யக் கோரி இலங்கை போலீஸ் மனு தாக்கல் செய்ததை அடுத்து மன்னார் நீதிமன்றம் மாவீரர் தினத்தை நினைவுகூர்வதற்கு மன்னார் மாவட்டம் முழுவதும் தடை விதித்துள்ளது.

By: November 21, 2020, 2:56:34 PM

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாவீரர் தினத்தை தடை செய்யக் கோரி இலங்கை போலீஸ் மனு தாக்கல் செய்ததை அடுத்து மன்னார் நீதிமன்றம் மாவீரர் தினத்தை நினைவுகூர்வதற்கு மன்னார் மாவட்டம் முழுவதும் தடை விதித்துள்ளது.

மாவீரர் தின நினைவுகூரல்களை தடை செய்யக் கோரி மன்னார் காவல்துறை மனு தாக்கல் செய்ததையடுத்து, 2020 நவம்பர் 21 முதல் 27 ஆம் தேதி வரை மன்னாரில் மாவீரர் தின நினைவுகூரல் நிகழ்சிகளை தடை செய்து மன்னார் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

மன்னார் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, வழக்கறிஞர் எஸ்.தினேசன் “நவம்பர் 21 முதல் நவம்பர் 27 வரை நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாவீரர் தினத்தை நினைவுகூரும் நடவடிக்கைகள் மீதான தடையை உறுதிப்படுத்தினார். மேலும், நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட தடையை விதித்தது. குறிப்பாக, மாவீரர் நாள் நினைவு நடவடிக்கைகளில் கலந்துகொள்ள வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இலங்கை தமிழ் அரசு கட்சி (ஐ.டி.ஏ.கே) உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் உள்ளிட்ட 5 நபர்களுக்கு தடை விதித்துள்ளது.

“அனைத்து தரப்ப்பு பொது மக்களும் மாவீரர் நாள் நினைவுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தற்போதுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இந்த தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இந்த உத்தரவை மீறுபவர்கள் கைது செய்யப்படலாம் என்றும் வழக்கறிஞர் தினேசன் கூறினார்.

மன்னார் நீதிமன்றம் உத்தரவில் கூறியிருப்பதாவது, “அடுத்த ஒரு வாரத்துக்கு மாவீரர் நாள் நினைவு நிகழ்ச்சிகளில் 8 பேர் பங்கேற்க தடை விதிக்க வவுனியா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவில் தமிழ் தேசிய கூட்டணி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி (டி.என்.பி.எஃப்)நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுச் செயலாளருமான செல்வராஜா கஜேந்திரன் உட்பட பல தமிழ் அரசியல்வாதிகள் அடங்கியுள்ளனர் என்று வவுனியா காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும், இந்த ஆண்டு மாவீரர் நாள் நினைவுகூரல்களைத் தடுக்கும் முயற்சியில் தமிழ் தாயகம் முழுவதும் உள்ள இலங்கை போலீசார் உள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

யாழ்பாணத்தில் நவம்பர் 25 முதல் 27 வரை மாவீரர் நால் நினைவேந்தல்களைத் தடைசெய்வதற்கான காரணமாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (பி.டி.ஏ) காரணம் காட்டி இலங்கை போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த ஆண்டு நடைபெறும் மாவீரர் நாள் நினைவுகூரல்களை தடை செய்யக் கோரிய கோரிக்கைகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை யாழ்ப்பாண உயர் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Mannar court ban maaveerar naal commemorating in sri lanka

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X