Advertisment

சிசிடிவியில் பதிவான விண்கல் விழும் நிகழ்வு

பகல் நேரத்தில் இருக்கும் ஒளியை விட பிரகாசமாக இருந்தது. வானில் இருந்து நீலநிற ஒளி பூமிக்குள் இறங்கியது போன்ற உணர்வு தங்களுக்கு ஏற்பட்டது.

author-image
kumaranbabu tk
புதுப்பிக்கப்பட்டது
New Update
meteor, lighting, cctv, viral, australia, விண்கல், மின்னல், கண்காணிப்பு கேமிரா, ஆஸ்திரேலியா

meteor, lighting, cctv, viral, australia, விண்கல், மின்னல், கண்காணிப்பு கேமிரா, ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் விண்கற்கள் விழும் நிகழ்வு, அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் உள்ள அலைஸ் ஸ்பிரிங்ஸ் பகுதிவாழ் மக்களிடமிருந்து போலீஸ் உயர் அதிகாரிக்கு புகார் வந்தது. அந்த புகாரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நேரத்தில் விண்ணிலிருந்து அதிக வெளிச்சம் பரவியது. அது பகல் நேரத்தில் இருக்கும் ஒளியை விட பிரகாசமாக இருந்தது. வானில் இருந்து நீலநிற ஒளி பூமிக்குள் இறங்கியது போன்ற உணர்வு தங்களுக்கு ஏற்பட்டது. அந்த நேரத்தில், வீட்டின் கதவுகள், பொருட்கள், நிலநடுக்கம் ஏற்பட்டதுபோன்று ஆட்டம் கண்டன.

இதனையடுத்து, போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி வீடியோக்களை ஆய்வு செய்தனர். விண்கல் ஒன்று பூமியில் விழுந்த நிகழ்வு, அந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகி இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர். அந்த வீடியோவை, போலீசார் வெளியிட்ட நிலையில், நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் அதை வைரலாக்கி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம், இதுபோன்றெதாரு நிகழ்வு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நிகழ்ந்தது. அந்த வீடியோவும், அப்போது சமூகவலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment