நேபாளத்தில் பயணிகள் விமானம் கோர விபத்தில் சிக்கியது

நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையம் அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது.

வங்காள தேசத்தில் இருந்து  அமெரிக்காவை நோக்கி சென்றுக் கொண்டிருந்த பயணிகள் விமானம் நேபாள் விமான நிலையத்தில் விபத்துள்ளானது.

இதில் பயணித்த 65 பயணிகளின் நிலைக் குறித்து எந்தவித தகவலும் வெளிவரவில்லை. அமெரிக்காவில் இருந்து வங்க தேசத்துக்கு சென்றுக் கொண்டிருந்த இந்த விமானம், நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையம் அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது.

தற்போது வரை 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். பயணம் செய்த 78 பேரில் மீதமுள்ள 65 பயணிகள் விபத்தில் சிக்கி இறந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.விபத்துக்குள்ளான இடத்தில் நேபாள ராணுவத்தினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான விபத்து காரணமாக விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்துக்குள்ளான பகுதி முழுவதும் புகை மண்டலாக மாறியுள்ளது.

விபத்துக் குறித்த காரணம் தற்போது வரை கண்டறியப்படவில்லை.

×Close
×Close