Advertisment

ராணி எலிசபெத் மரணம்.. இங்கிலாந்தின் புதிய மன்னராகிறார் சார்லஸ்.. பின்னணி விவரம்

இங்கிலாந்து ராணி எலிசபெத் II காலமான நிலையில், புதிய மன்னராக அவரது மூத்த மகன் 73 வயதான சார்லஸ் பதவியேற்க உள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ராணி எலிசபெத் மரணம்.. இங்கிலாந்தின் புதிய மன்னராகிறார் சார்லஸ்.. பின்னணி விவரம்

பிரட்டனின் மிக நீண்ட காலம் ராணியாக இருந்த எலிசபெத் II, தனது 93 வயதில் உடல்நலக் குறைவால்

வியாழக்கிழமை காலமானார். பக்கிங்ஹாம் அரண்மனை இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கிட்டத்திட்ட 70 ஆண்டுகள் ராணியாக இருந்துள்ளார். இந்நிலையில், அடுத்த மன்னராக ராணி இரண்டாம் எலிசபெத் மூத்த மகன் சார்லஸ் பதவியேற்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சார்லஸ் தனது 73 வயதில் மன்னராக பதவியேற்கிறார்.

Advertisment

இவரிடம் பல முரண்பாடுகள் இருப்பதாகவே கூறப்படுகிறது. 73 வயதில் சவால்களை எதிர்கொள்கிறார். இவரது முதல் மனைவி டயானா. இரண்டாவது மனைவி கமீலா. இவர் பொது கருத்துகளில் இருந்து எப்போதும் விலகியே உள்ளார்.

புதிய மன்னர் சார்லஸ் பலவீனமானவர், வீண் தலையீடு, அரச பதவிக்கு தகுதி இல்லாதவர் என இவரது எதிர்ப்பாளர்கள் கடுமையாக சாடுகின்றனர். செடிகளுடன் பேசுவதற்கும், கட்டடக்கலை, சுற்றுச்சூழலின் மீது ஆர்வமுள்ளதற்கும் கேலி செய்யப்பட்டார். இளவரசி டயானாவுடனான விவாகரத்து எப்போதும் பேசுபொருளாகவே இருந்து வருகிறது.

சார்லஸ் ஆதரவாளர்கள் கூறுகையில், அவர் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறார். காலநிலை மாற்றம் போன்ற விஷயங்களில் அவர் தவறாகப் பார்க்கப்படுகிறார். அனைத்து சமூக மக்களின் நலன் மீது அக்கறையுடன் செயல்படுகிறார். அவரது பிரின்ஸ் அறக்கட்டளை தொண்டு நிறுவனம் தற்போது வரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலையில்லாத மற்றும் பின்தங்கிய இளைஞர்களுக்கு உதவியுள்ளது என்றனர்.

அரச குடும்பத்தை நவீனமயமாக்குதல், வேகமாக மாறிவரும் சமத்துவ சமூகத்தில் தனக்கென ஓரிடத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். நிறுவனத்தில் மரபுகளைப் பராமரிக்கிறார். அந்த பதற்றத்தை அவரது சொந்த மகன்களின் வாழ்க்கையின் மூலம் காணலாம்.

சார்லஸ் மூத்த மகன் வில்லியம் (40) இப்போது இருக்கும் அவரது ஒரே வாரிசு பாரம்பரிய கடமை, தொண்டு நிறுவனப் பணி, ராணுவப் பணிகளை கவனித்து வருகிறார்.

இளைய மகன் ஹாரி (37) அரச குடும்பத்தை விட்டு வெளியேறினார். மனைவி மேகன், அமெரிக்க முன்னாள் நடிகை மற்றும் குழந்தைகளுடன் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கிறார். ஒரு காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த சகோதரர்கள், இப்போது அவ்வளவாக பேசுவது இல்லை என்று கூறப்படுகிறது.

சார்லஸ் வளர்ப்பு, படிப்பு

சார்லஸ் பிலிப் ஆர்தர் ஜார்ஜ், தனது தாத்தா ஆறாம் ஜார்ஜ் ஆட்சியின் 12ஆவது ஆண்டில் நவம்பர் 14, 1948 அன்று பக்கிங்ஹாம் அரண்மனையில் பிறந்தார். 1952இல் அவரது தாயார் இரண்டாம் எலிசபெத் ராணியான பிறகு அவர் அடுத்த வாரிசு, அரசு பதவியை அலங்கரிக்க உள்ளவர் என்று ஆனது. தாயார் ராணியான போது சார்லசுக்கு 3 வயது. அவரது வளர்ப்பு முந்தைய மன்னர்களிடமிருந்து வேறுபட்டிருந்தது. அவரது வளர்ப்பு அரச குடும்ப வளர்ப்பிலிருந்து வேறுபட்டிருந்தது.

அரண்மனையில் தனியாக பிரத்தியேக ஆசிரியர்களால் படித்த முன்னோடிகளைப் போலல்லாமல், சார்லஸ் மேற்கு லண்டனில் உள்ள ஹில் ஹவுஸ் பள்ளிக்குச் சென்று படித்தார். ஸ்காட்லாந்தில் உள்ள மிகவும் கண்டிப்பான கோர்டன்ஸ்டவுனுக்கு அனுப்பப்பட்டார். அவர் அங்கு படித்த நேரத்தை நரகம் என்று பிறகு விவரித்தார். தனிமையாகவும் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.

பாரம்பரியத்தை மீண்டும் உடைத்து கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் தொல்லியல் மற்றும் சமூக மானுடவியல் ஆகியவற்றைப் படிக்கச் சென்றார். பின், வரலாற்று படிப்புக்கு மாறினார்.

அவரது படிப்பின் போது அவர் முறையாக வேல்ஸ் இளவரசராக முடிசூட்டப்பட்டார், 1969 இல் ஒரு பெரிய விழாவில், 1969 இல், அவர் வெல்ஷ் பல்கலைக்கழகத்தில் ஒன்பது வாரங்கள் தங்கியிருந்தார், அங்கு அவர் தேசியவாதிகளிடமிருந்து கிட்டத்தட்ட தினசரி எதிர்ப்புகளை எதிர்கொண்டதாகக் கூறினார்.

டயானா

சார்லஸ் - டயானா ஸ்பென்சருடனான விவாகரத்து பிரிட்டனில் எப்போதும் பேசுபொருளாகவே பார்க்கப்படுகிறது. இரண்டாவது மனைவி கமீலா பார்க்கர் பவுல்ஸுடனான அவரது உறவு இதில் தொடர்புடையதாக உள்ளது.

சார்லஸ் - டயானா திருமணம் 1981ஆம் ஆண்டு 750 மில்லியன் மக்கள் முன்னிலையில் (தொலைக்காட்சி வாயிலாக) திருமணம் செய்து கொண்டனர். பலரும் இவர்களுக்கு வரவேற்பு தெரிவித்து, பொருத்தமான ஜோடி என்று கூறினர்.

ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக சென்றது. 1982ஆம் ஆண்டு வில்லியம், 1984ஆம் ஆண்டு ஹாரி பிறந்தனர். 1992இல் வாழ்க்கையில் பிரச்சனை தொடங்கியது என்று டயானா குற்றஞ்சாட்டினார். கமீலாவை சுட்டிக்காட்டி பேசினார். 1996ஆம் ஆண்டு சார்லஸ் - டயானா விவாகரத்து பெற்றனர்.

1997இல் பாரிஸ் கார் விபத்தில் டயானா உயிரிழந்தார். அப்போது சார்லஸ்- கமீலாவுக்கு எதிராக பத்திரிகைகளில் பேசப்பட்டது. பொதுமக்களிடையே அதிகம் பேசப்பட்டது. 2005ஆம் ஆண்டில் சார்லஸ் கமீலாவை மணந்தார்.

அவர் தனது சுலபமான பாணிக்காக அதிக வரவேற்பையும் பாராட்டையும் பெறுவதற்காக பொது கவனத்திற்கு வந்துள்ளார். இருப்பினும், டயானாவின் நிழல் இருந்து வருகிறது. சார்லஸ்-கமீலா உறவுக்கு வலு சேர்க்கும் வகையில் நெட்ஃபிலிக்ஸ் நாடகமான "தி கிரவுன்" முக்கிய பங்காக அமைந்தது.

பல முரண்பாடுகளுக்காக பேசப்பட்டாலும், எதிர்வரும் சவால்களை மேற்கொள்ள உள்ளார். சார்லஸ் தனது 73வயதில் மன்னராக பதவியேற்க உள்ளார். விரைவில் பதவியேற்பு விழா நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment