Advertisment

2020ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 2 பெண்களுக்கு கூட்டாக அறிவிப்பு

2020ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு இம்மானுவேல் சார்பென்டியர், ஜெனிஃபர் ஏ டவுட்னா ஆகிய 2 பெண் அறிவியலாளர்களுக்கு மரபணு மாற்ற ஆய்வுகளுக்காக நோபல் பரிசு கூட்டாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nobel prize in chemistry, chemistry nobel prize 2020, 2020 Nobel prize, நோபல் பரிசு, நோபல் பரிசு 2020, வேதியியலுக்கான நோபல் பரிசு, Nobel prize winners 2020, இம்மானுவேல் சார்பென்டியர், ஜெனிஃபர் ஏ டவுட்னா, Emmanuelle Charpentier, Jennifer A. Doudna, chemistry nobel 2020, Marie Curie, tamil indian express world news

2020ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு இம்மானுவேல் சார்பென்டியர், ஜெனிஃபர் ஏ டவுட்னா ஆகிய 2 பெண் அறிவியலாளர்களுக்கு மரபணு மாற்ற ஆய்வுகளுக்காக நோபல் பரிசு கூட்டாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

Advertisment

ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் புதன்கிழமை 2020ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை இம்மானுவேல் சர்பென்டியர் மற்றும் ஜெனிபர் ஏ. டவுட்னா ஆகிய 2 பெண் அறிவியாலாளர்களுக்கு மரபணு மாற்றத்திற்கான முறையை உருவாக்கியதற்காக வழங்கியுள்ளது.

“இம்மானுவேல் சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் ஏ. டவுட்னா ஆகியோர் மரபணு தொழில்நுட்பத்தின் கூர்மையான கருவிகளில் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்: அது CRISPR/Cas9 மரபணு கத்தரிக்கோல் என்று அகாடமி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், “இவற்றைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகளின் டி.என்.ஏவை மிக அதிக துல்லியமாக மாற்ற முடியும். இந்த தொழில்நுட்பம் உயிர் அறிவியலில் ஒரு புரட்சிகர தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது புதிய புற்றுநோய் சிகிச்சைகளுக்கு பங்களிப்பு செய்கிறது. மேலும், பரம்பரை நோய்களைக் குணப்படுத்தும் கனவை நனவாக்கக்கூடும்” என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சார்பென்டியர் மற்றும் அமெரிக்கரான டவுட்னா ஆகியோர் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற 6வது மற்றும் 7வது பெண்களாக மேரி கியூரி (1911) மற்றும் பிரான்சிஸ் அர்னால்ட் (2018) போன்றவர்களின் வரிசையில் இணைந்துள்ளனர்.

இந்த உயரிய விருது 10 மில்லியன் குரோனா (அதாவது 1.1 மில்லியனுக்கு அதிகமான அமெரிக்க டாலர்) தங்கப் பதக்கம் மற்றும் பரிசுத் தொகையுடன் அளிக்கப்படுகிறது. இது விருதை ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பரிசு ஸ்வீடிஷ் கண்டுபிடிப்பாளர் ஆல்பிரட் நோபல் அவர்கள் பெயரில் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

முன்னதாக திங்கள்கிழமை நோபல் கமிட்டி அமெரிக்கர்கள் ஹார்வி ஜே. ஆல்டர் மற்றும் சார்லஸ் எம். ரைஸ் மற்றும் பிரிட்டிஷை சேர்ந்த விஞ்ஞானி மைக்கேல் ஹாக்டன் ஆகியோருக்கு கல்லீரலைத் தாக்கும் ஹெபடைடிஸ் சி வைரஸைக் கண்டுபிடித்ததற்காக உடலியல் மற்றும் மருத்துவத்திற்கான பரிசை வழங்கியது.

செவ்வாய்க்கிழமை இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரிட்டனின் ரோஜர் பென்ரோஸ், ஜெர்மனியின் ரெய்ன்ஹார்ட் ஜென்செல் மற்றும் அமெரிக்காவின் ஆண்ட்ரியா கெஸ் ஆகியோருக்கு அண்ட கருந்துளைகளின் ரகசியங்களைப் புரிந்து கொள்வதற்கான ஆய்வில் முன்னேற்றம் கண்டதற்காக அறிவிக்கப்பட்டது.

மேலும், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்புகளுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Nobel Prize
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment