பாகிஸ்தானில் கோழியுடன் பாலியல் உறவு கொண்ட சிறுவன் கைது!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன், கோழியுடன் பாலியல் உறவு கொண்டதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். மன்சாப் அலி எனும் நபர், தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சிறுவனான அன்சார் ஹுசைன், தனது கோழியை நவம்பர் 11-ஆம் தேதி கடத்தி கற்பழித்துவிட்டார் என காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார்.

இந்த புகாரை எடுத்துக் கொண்டு போலீசார் விசாரிக்கையில், கோழியுடன் ஹுசைன் உறவு கொண்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த பாலியல் உறவில் அந்த கோழி இறந்தேவிட்டது. இந்த கோர சம்பவத்தை நஸ்ருல்லா மற்றும் துஃபைல் ஆகிய இருவரும் நேரில் பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.

இதன்பின்னர், அந்தக் கோழியை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்திய போது, கோழியுடன் ஹுசைன் உறவு கொண்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, ஹுசைன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது குற்றத்தை ஹுசைன் ஒப்புக்கொண்டுள்ளார். தனது பாலியல் உணர்வை கட்டுப்படுத்த முடியாமல் இதுபோன்று செய்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

×Close
×Close