பாகிஸ்தானில் விமான விபத்து ; பலர் பலி

Pakistan plane crash : விமான விபத்து சம்பவத்தை தொடர்ந்து கராச்சியில் உள்ள மருத்துவமனைகளை தயாராக வைத்திருக்க உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், மீட்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருவதாக சிந்து மாகாண அமைச்சர் மீரான் யூசுப் தெரிவித்துள்ளார்.

By: Updated: May 22, 2020, 09:32:06 PM

பாகிஸ்தானின் கராச்சி விமானநிலையம் அருகே நிகழ்ந்த விமான விபத்தில் 90 பயணிகள் உட்பட 98 பேரின் நிலை என்ன என்ற கேள்வி சர்வதேச அளவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் ஏர்லைன்சுக்கு சொந்தமான பிகே 8303 விமானம், லாகூரில் இருந்து 90 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் கராச்சி நோக்கி புறப்பட்டது.

கராச்சியை நோக்கி வந்த விமானம், விமானநிலையம் அருகே உள்ள ஜின்னா கார்டன் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக, பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் செய்தித்தொடர்பாளர் அப்துல்லா ஹபீஜ் தெரிவித்துள்ளதாக டான் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இம்ரான் கான் ஆறுதல் : இந்த விபத்து நிகழ்வு, தனக்கு மிகுந்த அதிர்ச்சியளித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் குணம்பெற பிரார்த்திப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள், மீட்புபடையினர் விரைந்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து அதிகளவு புகை கிளம்பும் போட்டோக்கள், சமூகவலைதளங்களை வியாபித்துள்ளன.

இந்த விபத்தால், அந்த பகுதியில் உள்ள பல வீடுகள் கடும் சேதமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, துரித மீட்பு படையினர், சிந்த் பகுதியை சேர்ந்த பாதுகாப்பு படையிவர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு அவர்கள் மீட்புபணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்து சம்பவத்தை தொடர்ந்து கராச்சியில் உள்ள மருத்துவமனைகளை தயாராக வைத்திருக்க உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், மீட்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருவதாக சிந்து மாகாண அமைச்சர் மீரான் யூசுப் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Pakistan plane crash lahore karachi airport imran khan condolence

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X