Advertisment

இந்தியாவுடன் சுமூக உறவு, காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு – பாகிஸ்தான் பிரதமர் விருப்பம்

சமத்துவம், நீதி மற்றும் பரஸ்பர மரியாதை மற்றும் காஷ்மீர் பிரச்சினையின் தீர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவுடனான அமைதியான உறவுக்கு விருப்பம் – பாகிஸ்தான் பிரதமர் பேச்சு

author-image
WebDesk
New Update
இந்தியாவுடன் சுமூக உறவு, காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு – பாகிஸ்தான் பிரதமர் விருப்பம்

Pakistan PM Shehbaz Sharif expresses desire for peaceful ties with India, Kashmir issue resolution: பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், ”சமத்துவம், நீதி மற்றும் பரஸ்பர மரியாதை" மற்றும் காஷ்மீர் பிரச்சினையின் தீர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவுடனான அமைதியான உறவுக்கு தனது விருப்பத்தை வெளிப்படுத்தியதாக வெள்ளிக்கிழமை ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

காஷ்மீர் விவகாரம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பாக இருதரப்பு உறவுகளில் சிக்கல் உள்ள சூழ்நிலையில், தெற்காசியாவில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த சர்வதேச சமூகம் "எளிதாக்கும் பங்கை" வகிக்க வேண்டும் என்றும் ஷெரீப் வலியுறுத்தினார்.

இதையும் படியுங்கள்: தாலிபான்கள் நிதியுதவி; மீண்டும் எழுகிறது ஐ.எஸ் தாக்குதலில் சிதைந்த சீக்கிய குருத்வாரா

பாகிஸ்தானுக்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய தூதர் நீல் ஹாக்கின்ஸ் உடனான சந்திப்பின் போது ஷெரீப் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார் என்று பிரதமர் அலுவலகத்தை மேற்கோள்காட்டி Dawn செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

”சமத்துவம், நீதி மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவுடன் அமைதியான உறவை பாகிஸ்தான் விரும்புகிறது. இந்தச் சூழலில், காஷ்மீரிகளின் விருப்பங்களுக்கு ஏற்ப, UNSC தீர்மானங்கள் மூலம் ஜம்மு-காஷ்மீர் பிரச்சினைக்கு நியாயமான மற்றும் அமைதியான தீர்வு, இன்றியமையாதது," என்று ஷெரீப் கூறினார்.

"தெற்காசியாவில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு சர்வதேச சமூகம் இந்த விஷயத்தில் ஒரு எளிதாக்கும் பங்கை வகிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

பயங்கரவாதம், விரோதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலில் பாகிஸ்தானுடன் இயல்பான அண்டை நாடுகளின் உறவுகளை விரும்புவதாக இந்தியா பலமுறை பாகிஸ்தானிடம் கூறியுள்ளது. பயங்கரவாதம் மற்றும் விரோதம் இல்லாத சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானுக்கு உள்ளது என இந்தியா கூறியுள்ளது.

ஆகஸ்ட் 2019 இல் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரங்களை திரும்பப் பெறுவதாகவும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதாகவும் இந்தியா அறிவித்த பிறகு இருதரப்பு உறவுகள் மேலும் மோசமடைந்தன.

ஜம்மு-காஷ்மீர் "அன்றும், இன்றும், என்றும்" நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும் என்று பாகிஸ்தானிடம் இந்தியா பலமுறை கூறியுள்ளது. மேலும், இந்தியாவுக்கு எதிரான அனைத்துப் பிரச்சாரங்களையும் நிறுத்துமாறும், யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறும் பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment