பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் ஞாயிற்றுக்கிழமை (பிப்.5) துபாயில் உள்ள மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் காலமானார்.
Advertisment
பாகிஸ்தானின் 4 நட்சத்திர அந்தஸ்து ஜெனரலான முஷாரப், 1999இல் இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் ஆட்சிக்கு வந்தார்.
தொடர்ந்து, அவர் அக்டோபர் 1999 முதல் நவம்பர் 2002 வரை பாகிஸ்தானின் தலைமை நிர்வாகியாக பணியாற்றினார். ஜூன் மாதம் முதல் பாகிஸ்தானின் பத்தாவது அதிபராக பதவியேற்றார். 2001 முதல் ஆகஸ்ட் 2008 வரை பதவியில் தொடர்ந்தார்.
முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ மற்றும் ரெட் மசூதி மதகுரு கொலை வழக்கில் முஷாரப் தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவர் மார்ச் 2016 முதல் துபாயில் வசித்து வந்தார், மேலும் 2007 இல் அரசியலமைப்பை இடைநீக்கம் செய்ததற்காக தேசத்துரோக வழக்கை எதிர்கொண்டார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பர்வேஸ் முஷாரப்
ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, பாகிஸ்தானின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததாக பாகிஸ்தானின் இராணுவத்தின் மக்கள் தொடர்பு பிரிவு கூறியுள்ளது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம், முஷாரஃப்பின் குடும்பம் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெளிவுபடுத்தியது, முஷாரஃப் அமிலாய்டோசிஸ் நோயின் சிக்கலால் மூன்று வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது ஒரு அரிதான பாதிப்பு ஆகும்.
இந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். முன்னதாக இந்த நோய் தொடர்பாக அவர் ட்விட்டரிலும் கூறியிருந்தார்.
மறைந்த பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாயுடன் பர்வேஸ் முஷாரப்
பர்வேஸ் முஷாரப் 2001ல் இந்தியா வந்திருந்த போது மிகுந்த உற்சாகமாக காணப்பட்டார். தாஜ்மஹால் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்தார். முன்னாள் பிரதமர்களான அடல் பிஹாரி வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோருடன் நல்ல உறவை பேணிணார் என்பது நினைவு கூரத்தக்கது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/