Advertisment

மோடிக்கு உலக அரங்கில் சக்திவாய்ந்த, செல்வாக்கு மிக்க குரல் உள்ளது – இங்கிலாந்து

அமைதிக்கான குரல்களுக்கு விளாடிமிர் புதின் செவிசாய்ப்பார் என்று நம்புகிறோம். எனவே பிரதமர் மோடியின் தலையீட்டை நாங்கள் மிகவும் வரவேற்கிறோம் - இங்கிலாந்து வெளியுறவு செயலாளர்

author-image
WebDesk
New Update
மோடிக்கு உலக அரங்கில் சக்திவாய்ந்த, செல்வாக்கு மிக்க குரல் உள்ளது – இங்கிலாந்து

PTI

Advertisment

பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக அரங்கில் சக்திவாய்ந்த, செல்வாக்கு மிக்க குரல் உள்ளது, உலக அரங்கில் இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷ்யத் தலைமை மதிக்கிறது என்று கூறிய இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் கிளவர்லி, உக்ரைன் மோதலுக்கு மத்தியில் அமைதிக்கு அழைப்பு விடுக்கும் குரல்களுக்கு அதிபர் விளாடிமிர் புதின் செவிசாய்ப்பார் என்று இங்கிலாந்து நம்புகிறது என்றும் வலியுறுத்தினார்.

ரஷ்ய-உக்ரைன் மோதல் மற்றும் மோடி கடந்த வாரம் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22 வது கூட்டத்தில் புதினிடம் "இன்றைய சகாப்தம் போர் அல்ல" என்று கூறியது குறித்த கேள்விகளுக்கு ஜேம்ஸ் கிளவர்லி பதிலளித்தார்.

இதையும் படியுங்கள்: ராணுவ அணி திரட்டலுக்கு அழைப்பு விடுத்த ரஷ்ய அதிபர் புதின்

“பிரதமர் மோடிக்கு உலக அரங்கில் சக்திவாய்ந்த, செல்வாக்கு மிக்க குரல் உள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் குரலையும் நிலைப்பாட்டையும் ரஷ்யத் தலைமை மதிக்கிறது என்பதை நாம் அறிவோம். பிரதமர் மோடியின் தலையீடு மிக மிக வரவேற்கத்தக்கது என்று நினைக்கிறேன். மேலும், அமைதிக்காகவும், தீவிரத்தை குறைக்கவும் அழைப்பு விடுக்கும் குரல்களுக்கு விளாடிமிர் புதின் செவிசாய்ப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே பிரதமர் மோடியின் தலையீட்டை நாங்கள் மிகவும் வரவேற்கிறோம்,” என்று ஜேம்ஸ் கிளவர்லி PTI க்கு அளித்த பேட்டியில் கூறினார்.

உக்ரைன் மோதலில் பயங்கரமான உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜேம்ஸ் கிளவர்லி கூறினார்.

"வெளிப்படையாக, ரஷ்ய - உக்ரேனிய மோதலில், உக்ரேனியர்களின் உயிர் இழப்புகளை நாங்கள் கண்டிருக்கிறோம், ஆனால் ரஷ்ய இளைஞர்கள் மற்றும் பெண்களின் உயிரிழப்புகள், இன்னும் பயங்கரமானது" என்று இங்கிலாந்தின் காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலாளர் ஜேம்ஸ் கிளவர்லி உயர்மட்ட ஐ.நா பொதுச் சபை அமர்வில் கூறினார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் மூலம் உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் பஞ்சத்தின் ஆபத்தில் உள்ள மக்கள் தொடர்பாக முன்னரே இருந்த சவால்களை ஜேம்ஸ் கிளவர்லி அடிக்கோடிட்டுக் காட்டினார்.

“எங்கள் பொருளாதார தடைகள் உணவு ஏற்றுமதியை குறிவைக்கவில்லை, அவை உர ஏற்றுமதியை குறிவைக்கவில்லை, அம்மோனியா ஏற்றுமதியை குறிவைக்கவில்லை என்பதில் நாங்கள் எப்போதும் மிக தெளிவாக இருக்கிறோம். ஆயினும்கூட, உலகில் ஏற்கனவே பசியுடன் இருக்கும் மக்களின் நிலைமை, புதினின் உக்ரைன் படையெடுப்பால் இன்னும் மோசமாகிவிட்டது. அதனால்தான் பிரதமர் மோடியின் தலையீடு முக்கியமானது மற்றும் மிகவும் வரவேற்கத்தக்கது’’ என்று ஜேம்ஸ் கிளவர்லி கூறினார்.

 “வெளிப்படையாக இந்தியா உலக அரங்கில் நம்பமுடியாத முக்கியமான மற்றும் செல்வாக்குமிக்க நாடு. உலகில் மிகவும் கொந்தளிப்பு நிலவி வரும் நிலையில், இந்தியாவுடனான நமது நெருங்கிய கூட்டாண்மை மற்றும் பணி உறவு நம்பமுடியாத அளவிற்கு முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்,” என்று ஜேம்ஸ் கிளவர்லி கூறினார். கொந்தளிப்பான உலகளாவிய காலங்கள் மற்றும் மனிதாபிமான மற்றும் புவி-அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் உலகத் தலைவர்கள் உயர்மட்ட வாரத்தில் ஐ.நா தலைமையகத்தில் கூடியிருக்கும் நிலையில், ஐ.நா. இன்னும் பொருத்தமானது என்றும் ஜேம்ஸ் கிளவர்லி கூறினார்.

"உலகம் பல பகுதிகளில் மாறி வருகிறது மற்றும் மிக மிக விரைவாக மாறுகிறது. சர்வதேச நிறுவனங்கள் அந்த மாறிவரும் சவால்கள் மற்றும் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் மாற்றியமைத்து பரிணாமத்தை உருவாக்குவது முக்கியம். மேலும் ஐ.நா போன்ற பலதரப்பு மன்றங்கள் எப்பொழுதும் நமது உறவின் முக்கிய அங்கமாக இருக்கும். இருதரப்பு உறவுகளும் மிக மிக முக்கியமானவை என்றும் ஜேம்ஸ் கிளவர்லி கூறினார். UNGA யில் கூட்டாகச் சந்திப்பது உண்மையில் முக்கிய இருதரப்பு சந்திப்புகளை நடத்துவதற்கு ஒரு "அருமையான வாய்ப்பை" வழங்குகிறது, என்றும் அவர் கூறினார்.

உயர்மட்ட UNGA அமர்விற்காக நியூயார்க்கில் உள்ள ஜேம்ஸ் கிளவர்லி, புதன்கிழமை மாலை UNGA கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்தார்.

முன்னதாக, ஜேம்ஸ் கிளவர்லி இந்தியப் பிரதிநிதியான ஜெய்சங்கரை சந்திக்க ஆவலுடன் இருப்பதாகக் கூறினார். ஜெய்சங்கருக்கு எங்களை நன்றாகத் தெரியும். அவர் எனக்கு முன் இருந்தவர்களுடன் பணியாற்றியவர். மேலும், உலகளாவிய பிரச்சனைகள், பிராந்திய பிரச்சனைகள் மற்றும் நமது இருதரப்பு உறவுகள் ஆகிய இரண்டையும் விவாதிக்க நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன், என்றும் அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

England Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment