Advertisment

ரயில் நிலையத்தில் உக்ரைன் ராணுவப் பிடியில் 3000 இந்தியர்கள்: புதின் தகவல்

கார்கிவ் நகரில் தனது தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளதால், உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் கார்கிவ் நகரில் வசிக்கும் அனைத்து இந்தியர்களும் அவசர அடிப்படையில் ஆன்லைன் படிவத்தை நிரப்புமாறு அறிவுறுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
ரயில் நிலையத்தில் உக்ரைன் ராணுவப் பிடியில் 3000 இந்தியர்கள்: புதின் தகவல்

உக்ரைனில் இந்திய மாணவர்கள் பிணை கைதிகளாக இருக்கிறார்கள் என்ற தகவல் எதுவும் கிடைக்கவில்லை என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறிய சில மணி நேரங்களில், கிழக்கு உக்ரைனில் உள்ள கார்கிவ் ரயில் நிலையத்தில் 3000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பிணைக் கைதிகளாக உக்ரைன் ராணுவம் பிடித்துவைத்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

புதின் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிகாரிகள், குடிமக்களை வெளியேற்றுவதற்கும் மனிதாபிமான பொருட்களை வழங்குவதற்கும், பாதுகாப்பான பாதையை ஏற்படுத்த தற்காலிக உடன்பாட்டை எட்டியுள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் தகவல் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை இரவு, பிரதமர் நரேந்திர மோடிக்கும் புதினுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலைப் கிரெம்ளின் விவரிக்கும்போதும், இந்தியர்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியது.

அதேபோல், வியாக்கிழமை இரவு புதின் பேசுகையில், உக்ரைனில் கல்வி பயிலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் ஒரு நாளுக்கு மேல் தங்க வைக்கப்பட்டனர். சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள், கார்கிவ் நகரில் பிணை கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். மேலும், சுமி நகரத்தில் 576 பேரை வைத்துள்ளனர்" என்றார்.

மேலும் பேசிய அவர், "கார்கிவ்வை விட்டு வெளியேற விரும்பிய சீன மாணவர்கள் மீது neo-Nazis தூப்பாக்கி சூடு நடத்தினர். அதில் இருவர் காயமடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் போர் மண்டலத்தை விட்டு வெளியேற விரும்புகிறார்கள். ஆனால், உக்ரைனியர்கள் அனுமதிக்கவில்லை. அவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கின்றனர். எங்கள் ராணுவம் உக்ரைன் மக்கள், வெளிநாட்டினர் எல்லையை கடக்க பாதுகாப்பான பாதையை உருவாக்கி போக்குவரத்தை ஏற்பாடு செய்துள்ளோம். ஆனால், உக்ரைன் ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தி தடுக்கின்றனர்" என்றார்.

முன்னதாக, உக்ரைனில் இந்திய மாணவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டதாக வெளியான செய்தி குறித்து பேசிய வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம், அங்கிருக்கும் இந்தியர்களுடன் தொடர்பில் தான் உள்ளது. கார்கிவ்வை விட்டு பல மாணவர்கள் பத்திரமாக வெளியேறிய தகவல் கிடைத்தது. இதுவரை இந்திய மாணவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் கிடைக்கவில்லை.

கார்கிவ் மற்றும் அண்டை பகுதிகளிலிருந்து மாணவர்களை நாட்டின் மேற்குப் பகுதிக்கு அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்திட உக்ரைன் அதிகாரிகளிடம் உதவி கோரியுள்ளோம்" என்றார்.

கிடைத்த தகவலின்படி, சுமார் 4 ஆயிரம் இந்திய மாணவர்கள் உக்ரைனின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ரஷ்ய எல்லைக்கு அருகில் சிக்கியுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து பேசிய பாக்சி, "மோதல் மண்டலங்களில் சிக்கியுள்ள இந்தியர்களின் நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அவர்களை அங்கிருந்து மேற்கு உக்ரைன் அல்லது தெற்கு உக்ரைனுக்கு நகர்த்துவதற்கான போக்குவரத்து விருப்பங்களை ஏற்பாடு செய்வதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம்" என்றார்.

ரஷ்யா கார்கிவ் நகரில் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதால், உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் வியாழன் அன்று கார்கிவ் நகரில் வசிக்கும் அனைத்து இந்தியர்களும் அவசர அடிப்படையில் ஆன்லைன் படிவத்தை நிரப்புமாறு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ukraine Russia Vladimir Putin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment