கண் இமைக்கும் நேரத்தில் உயிர் தப்பிய சிறுவர்கள்: நெஞ்சை பதபதைக்கும் வீடியோ!

பார்ப்பவர்களுக்கே நெஞ்சை பதபதைக்க வைக்கும் இந்த வீடியோ

விபத்து எப்படி நடக்கும், யாருக்கு நடக்கும் என்பது கணிக்க முடியாத ஒன்று. நொடி பொழுதில் நடக்கும் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஏராளம் .  அந்த வகையில் சாலையில் நடக்கும் அதிகப்படியான விபத்துக்கள் தற்போது விழிப்புணர்வுக்காக பெருமளவில் பகிரப்பட்டு வருகின்றன

சிலர் செய்யும் சிறு தவறுகள் எப்படியெல்லாம் விபத்தை உண்டாக்குகின்றன என்பதை பொதுமக்கள் நேரில் பார்த்தால் அதன் ஆழம் புரியும் என்பதற்காகவே இந்த  வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. அப்படி ஒரு விபத்து சீனாவில் அரங்கேறியுள்ளது.

லாரியின் அடியில் மாட்டிக் கொண்ட சிறுவன் நொடி பொழுதில்  உயிர் தப்பும் காட்சிகள் பார்ப்பவர்களுக்கே அச்சத்தை வர வைத்துள்ளது.  இந்த வீடியோவில்  சைக்கிள்  ஓட்டியப்படியே  இரண்டு சிறுவர்கள்  சாலையை கடக்கின்றனர். அப்போது எதிரே லாரி வருவதைக் கண்ட சிறுவன் ஒருவன், நடைபாதை மேலே சைக்கிளை ஏற்றுகிறான்.

ஆனால் தவறுதலாக அவன் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விடுகிறான். அந்த நொடியே எதிரே வந்த லாரியின் டயர் அவன் கழுத்து பகுதில் ஏறுகிறது.  அப்போது அவன் தோள் பட்டையில் மாட்டுக் கொண்டு இருந்த புத்தகபை அவனை காப்பாற்றுகிறது.

பார்ப்பவர்களுக்கே  நெஞ்சை பதபதைக்க வைக்கும் இந்த வீடியோ  சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Posted by Đại Kỷ Nguyên – Tin nhanh on 12 एप्रिल 2018

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil International News by following us on Twitter and Facebook

×Close
×Close