இலங்கையில் ஜனவரி 11-முதல் பள்ளிகள் திறக்கப்படும் : கல்வி அமைச்சர் அறிவிப்பு

உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்து வகையில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்ட்ட நிலையில், பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்துள்ள நாடுகளில் மீண்டும் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இலங்கையில் வரும் 2021 ஜனவரி மாதம் முதல்  பள்ளிகள் திறக்கப்படும் என […]

உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்து வகையில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்ட்ட நிலையில், பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன.

தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்துள்ள நாடுகளில் மீண்டும் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இலங்கையில் வரும் 2021 ஜனவரி மாதம் முதல்  பள்ளிகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

மேற்கு மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளிளும்,  2021 ஜனவரி 11 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். ஆனால் மேற்கு மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பாஹா மாவட்டங்களிலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உடனடியாக பள்ளிகளை திறக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும் பள்ளிகள் திறக்கப்படும் அனைத்து பகுதிகளிலும், ஒவ்வொரு 10 நாட்களுக்கும் கொரோனா பாதிப்பு நிலைமை குறித்து  மதிப்பாய்வு செய்யப்பட்டு,  தீவிர பாதுகாப்பு நவடிக்கைள் மேற்கொள்ளப்படும். இதில் தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில், உள்ள பள்ளிகளை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த நவம்பர் 23 ஆம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள்  திறக்கப்பட்ட நிலையில், தற்போது, 2021 ஜனவரி 11 திங்கள் முதல் 1-5 ஆம் வகுப்புக்கான பள்ளிகள் மீண்டும் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Schools to open sri lanka january 11th minister of education

Next Story
இலங்கையில் புதிய வகை பறவை இனம் கண்டுபிடிப்பு: அனுமன்  ப்ளோவர்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com