Advertisment

முதல் அரச குடும்பத்து பலி! - கோட்டையிலும் கைவைத்த கொரோனா

“இன்று பிற்பகல்… எங்கள் சகோதரி மரியா தெரசா டி போர்பன் பர்மா COVID-19 தொற்று காரணமாக பாரிஸில் தனது எண்பத்தாறு வயதில் இறந்தார்"

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Spain’s Princess Maria Teresa dies Covid-19, first royal death due to virus

Spain’s Princess Maria Teresa dies Covid-19, first royal death due to virus

ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 86. இதன் மூலம் கொரோனா வைரஸால் பலியான முதல் அரச குடும்ப நபர் இவர் ஆவார்.

Advertisment

கோவிட்-19 காய்ச்சலுக்கு ஸ்பெயினில், கடந்த 24 மணிநேரத்தில் 832 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் ஸ்பெயினில் கொரோனா வைரஸுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5,690 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72,000 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஸ்பெயினின் இளவரசி மரியா தெரசா (86) கோவிட் -19 காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம்? மாவட்டம் வாரியாக புள்ளி விவரம்

ஃபாக்ஸ் நியூஸ் படி, 86 வயதான மரியா தெரசா, ஸ்பெயின் மன்னர் ஆறாம் பெலிப்பின் உறவினராவார். உறவினர். அவரது சகோதரர் இளவரசர் சிக்ஸ்டோ என்ரிக் டி போர்பன், கோவிட் -19 பாதிப்பால் மரியா இறந்துவிட்டதாக பேஸ்புக்கில் அறிவித்தார். அந்த பதிவில், “இன்று பிற்பகல்… எங்கள் சகோதரி மரியா தெரசா டி போர்பன் பர்மா COVID-19 தொற்று காரணமாக பாரிஸில் தனது எண்பத்தாறு வயதில் இறந்தார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பீப்பிள் பத்திரிகையின் படி, ஜூலை 28, 1933 இல் பிறந்த இளவரசி மரியா தெரசா, பிரான்சில் படித்தார். பாரிஸ் சோர்போனில் பேராசிரியராகவும், மாட்ரிட்டின் கம்ப்ளூடென்ஸ் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராகவும் பணி புரிந்துள்ளார்.

அவர் வெளிப்படையான கருத்துக்கள் மற்றும் ஆர்வலர் பணிகளுக்காக "சிவப்பு இளவரசி" என்று அழைக்கப்பட்டார்.

தனிமைப்படுத்தலின் போது, குடும்பத்துடன் மீண்டும் இணைந்திருக்க எளிய வழிகள்!

இளவரசிக்கு இறுதிச் சடங்கு மாட்ரிட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்த வார தொடக்கத்தில் கொரோனா வைரஸுக்கு ஆளான முதல் அரச குடும்பத்து நபரானார். ஆனால் இப்போது சார்லஸ் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன, கடந்த சில நாட்களாக வழக்கம் போல் வீட்டிலிருந்து வேலை செய்து வருவதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Spain
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment