Nirupama Subramanian
Sri Lanka Easter mass murder : இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகளின் காரணமாக இதுவரை 13 நபர்களை கைது செய்துள்ளது இலங்கை அரசாங்கம். 200க்கும் மேற்பட்டோர்களை பலி வாங்கிய இந்த தாக்குதலை ஜிஹாதி அமைப்புகள் எதாவது செய்திருக்குமா என்ற கோணத்தில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் இருந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 6 மாதங்களுக்கு முன்பு அவர் காணாமல் போனதாக அவர்களின் குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காலையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, காவல்த்துறையினர் சந்தேகத்தின் போது சிலரை நெருங்கும் போது 7வது மட்டும் 8வது குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஆனால் இதுவரையில் எந்த ஜிஹாத் இயக்கத்தினரை கைது செய்யச் சென்றனர் என்பது தொடர்பாக எந்த விதமான தகவல்களையும் அளிக்கவில்லை.
இந்திய தரப்பில் இருந்தும், இலங்கை தரப்பில் இருந்தும், தீவிரவாத தாக்குதல் நடைபெற உள்ளது என்று முன்பே எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
இலங்கை தலைமை காவல் அதிகாரி ஏப்ரல் 11ம் தேதியே தேசிய அளவில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய ஹை கமிஷன் மற்றும் தேவாலயங்களில் தீவிரவாத தாக்குதல், தீவிர இஸ்லாமிய பரப்புரையை மேற்கொள்ளும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பால் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
ஆனாலும் தமிழ், சிங்களப்புத்தாண்டு, புனித வெள்ளி, மற்றும் ஈஸ்டர் கொண்டாட்டங்களுக்காக காவல்த்துறை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. கடந்த 10 வருடங்களில், இலங்கையில் எவ்வளவு அமைதி நிலவி இருந்தால், இந்த எச்சரிக்கைகளை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்திருப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ள இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
Sri Lanka Easter mass murder : கொழும்புவில் புலிகள் நடத்திய தாக்குதல்கள்
தீவிரவாத தாக்குதல்கள் இந்த நாட்டிற்கு ஒன்றும் புதிது கிடையாது. 2009 மே மாதத்திற்கு பிறகு நாட்டில் முதல் முறையாக வெடி கொண்டு வெடிக்கிறது. கொழும்புவில் உள்ள செண்ட்ரல் பேங்க் அருகே 1996ம் ஆண்டு விடுதலைப் புலிகள் நடத்திய தீவிரவாத தாக்குதல் தான், கொழும்புவில் நடைபெற்ற மிகப் பெரிய தாக்குதல். அதில் 91 நபர்கள் கொல்லப்பட்டனர்.
அதே போல் 2001ம் ஆண்டு ஜூலை மாதம் பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் விடுதலைப் புலிகளால் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் நேற்று நடைபெற்ற தாக்குதல்கள் எதுவும் அது போன்று இல்லை. மே 2009ம் ஆண்டிற்கு பிறகு, விடுதலைப் புலிகள் என்ற எண்ணமானது தமிழர்கள் வாழும் பகுதியில் மட்டும் கற்பனையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
விடுதலைப் புலிகள் தேவாலயங்களில் தாக்குதல்கள் அதிக அளவில் நடத்தியலை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் பெரும்பான்மை தமிழ் கிறித்துவர்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, அங்கு வாழ்ந்த தமிழ் இந்து மக்களிடம் ஒற்றுமையாக இணக்கமாக வாழ்ந்து வந்தனர். அதனால் கத்தோலிக்க தேவாலயங்களை தாக்குவதில் விடுதலை புலிகளுக்கு விருப்பம் கிடையாது.
இதற்கு முன்பு தேவாலயங்களை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல்கள்
நேற்று மாலை வரை, நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில், உலகில் இது போன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களின் ஒப்பீடுகள் நடந்து வருகின்றன.
நேற்று நடைபெற்ற 8 குண்டு வெடிப்புகளில் இரண்டு தற்கொலைப்படை தாக்குதல்கள் என்று கூறப்படுகிறது. இன்றைய சூழலில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகிவிட்டது. ஆனால் அவர்களின் இலக்கானது தேவாலயங்கள். பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஜோலோ கத்தோலிக்க தேவாலயம் மற்றும் தெற்கு பிலிப்பைனில் இருகும் மிந்தனௌ தேவாலயத்தில் இது போன்று ஜனவரி மாதம் இரட்டை தாக்குதல் நடத்தப்பட்டதை இது நினைவு கூறுகின்றது. 20 பேர்களை பலி கொண்ட இந்த தீவிரவாத தாக்குதல்கள் கிழக்கு ஆசியாவில் இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்போடு தொடர்பு கொண்டது.
சமீபத்தில் நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் பகுதியில் அமைந்திருந்த மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பையும் நினைவு கூறுகிறது இந்த தக்குதல்கள்.
பலி எண்ணிக்கை, மற்றும் விடுதிகளின் தேர்வினை ஒப்பிடும் போது, மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்கள் நினைவிற்கு வருகிறது. பெரும்பாலான வெளிநாட்டவர்கள் வந்து தங்கும் விடுதிகள் தான் இலக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புனித ஞாயிறு அன்று நடத்தபட்ட தாக்குதல், மார்ச் மாதம் 27, 2016 அன்று, லாகூரில் அமைந்திருக்கும் குல்ஷான் – இ – இக்பால் பூங்காவில் பாகிஸ்தான் தாலிபான்களால் நடத்தபட்ட தாக்குதலில் 75 பேர் கொல்லப்பட்டனர். 2017ம் ஆண்டு எகிப்தில் உள்ள இரண்டு கோப்டிக் தேவாலயங்களில் பால்ம் சண்டே (Palm Sunday) நிகழ்வின் போது 45 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் படிக்க : Sri Lanka Church Bomb Blasts Live Updates : உலக நாடுகள் கண்டனம்!
கடுமையான கண்டனங்களை பதிவு செய்த தவ்ஹீத் ஜமாத்
மேலே கூறப்பட்ட நிகழ்வுகள் யாவும், தேவாலயங்களையும், கிறித்துவர்களையும் இலக்காக கொண்டு ஐஎஸ் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது. காவல்துறையால் அறிவிக்கப்பட்ட தவ்ஹீத் ஜமாத் அமைப்பானது ஐஎஸ்-அமைப்பில் தங்களை இணைத்துக் கொள்ள சென்ற இலங்கை நபர்களுடன் தொடர்பில் இருப்பது.
ஆனாலும் இந்த மிகப்பெரிய தாக்குதல்களுக்கு கண்டனங்கள் தெரிவித்தது மட்டுமில்லாமல், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் முகநூலில் கருத்துக்களை வெளியிட்டுள்ளது. கண்டியில் நேற்று இரத்த சேகரிப்பு சேவையில் ஈடுபட்டுள்ளது. அதன் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிட்டதோடு, நாட்டின் நலனிற்காக எதுவும் செய்வோம் என்று கூறியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அடிப்படைவாத புத்தமதத்தினருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே இனவாத பிரச்சனைகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. 21 மில்லியன் மக்கள்த் தொகைக் கொண்ட இலங்கையில் 10% குறைவான மக்கள் தொகையை கொண்டவர்கள் இஸ்லாமியர்கள். 12.6% இந்துக்களும், 7% கிறித்துவர்களும், 70% புத்த மதத்தினரும் வாழும் நாடு. (2011 – மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி)
புலிகளின் காலத்தில் நாட்டில் இருந்த சில முக்கியமான பாதுகாப்புச் சட்டங்கள் மீண்டும் நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதல்கள், இலங்கையில் குழப்பத்தில் இருக்கும் அரசியல் அசாதாரண நிலையிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
இந்த வருடத்தின் இறுதியில் அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. 2015ம் ஆண்டு தோல்வியை சந்தித்த ராஜபக்ஷே இதில் போட்டியிடுகின்றார். 2007-2009 ஆண்டுகளில் இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளராக இருக்கும் கோத்தபாய ராஜபக்ஷேவும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தற்போது நடைபெற்றுள்ள தீவிரவாத தக்குதல் இலங்கையில் நடைபெற இருக்கும் தேர்தலின் போது மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கும்.