Advertisment

பதவி விலகுங்கள் அல்லது காரணத்தை சொல்லுங்கள் - அதிபருக்கு சொன்ன இலங்கை முன்னாள் பிரதமர்

இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய விக்கிரமசிங்க, தற்போதைய உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க, இலங்கை தெற்காசியாவில் உள்ள தனது நட்பு நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகியவற்றில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பி தருகிறோம் என உணவு தானியங்களை "கடன்" வாங்க வேண்டும் என்று கூறினார்.

author-image
WebDesk
New Update
பதவி விலகுங்கள் அல்லது காரணத்தை சொல்லுங்கள் - அதிபருக்கு சொன்ன இலங்கை முன்னாள் பிரதமர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடம் 10 ஆவது நாளை தாண்டியுள்ள நிலையில், ராஜபக்ச குடும்பத்தின் ராஜினாமா கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் அலுவலகம் அருகே கூடாரம் அமைத்து போராடி வருகின்றனர். இந்நிலையில், இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிபர் கோட்டாபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் அல்லது அவர் ஏன் செய்யவில்லை என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு பேசிய அவர், "தற்போதைய உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க, இலங்கை தெற்காசியாவில் உள்ள தனது நட்பு நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகியவற்றில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பி தருகிறோம் என உணவு தானியங்களை "கடன்" வாங்க வேண்டும்.

இந்தியா, ஜப்பான், சீனா, தென் கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் கூட்டமைப்பு உருவாக்கி, IMF உடனான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து பிரச்சினை சுமூகமாகும் வரை, இலங்கைக்கு உதவ பரிந்துரைக்கலாம். எரிபொருள் மற்றும் உணவுக்கான இந்திய கடன் வரி மே மாதத்திற்குள் தீர்ந்துவிடும். எனவே, இலங்கைக்கு மேலும் நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு, இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

publive-image

2015 முதல் 2019 வரை இலங்கையின் பிரதமராக விக்கிரமசிங்க இருந்தார். அவர் கூறியதாவது, கோத்தபாய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நாடாளுமன்றம் கூட அவரை ராஜினாமா செய்ய வற்புறுத்த முடியாது. அதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.ராஜினாமா செய்யவில்லை என்று என்னிடம் கோட்டாபய ராஜபக்சே கூறினார். நான் உடனே, நீங்கள் என்ன செய்யத் தயாராக இருக்கிறீர்கள், ஏன் ராஜினாமா செய்யவில்லை என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஒன்று அவர் பதவி விலக வேண்டும் அல்லது மக்களின் நம்பிக்கையை திரும்பப் பெற வேண்டும் எனக் கூறினேன் என்றார்.

கிராமப்புற விவசாயிகள் முதல் கொழும்பில் உள்ள உயரடுக்கு வரையிலான மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி இலங்கையில் போராட்டமாக வெடித்துள்ளது. இதனை, “Arab Spring” தருணம் என அழைக்கப்படுவதாக கூறப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், பல நாடுகளில் Arab Spring சரியாக முடிவடையவில்லை. இங்கு இராணுவம் மக்களுக்கு எதிராக வெளிப்படும் என்று நான் நினைக்கவில்லை, ஏனென்றால் அவர்கள் அதே பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், Arab Spring-இன் முடிவை தடுத்தாக வேண்டும் என்றார்.

தற்போது இலங்கை அரசாங்கத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அவரது அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா கடிதத்தை வழங்கியதையடுத்து, பிரதமர் கோட்டாபய கடந்த வாரம் முதல் தனது அரசாங்கத்தை ஸ்திரப்படுத்த முயற்சித்து வருகிறார்.

கடந்த வாரம் 3 முறை புதிய அமைச்சரவை பதவியேற்பதாக வதந்திகள் வந்தன.ஆனால் அது நடக்கவில்லை. ஏனென்றால், ராஜபக்ச முகாமில் உள்ள ஒரு சிலரே ஒரு கடினமான நெருக்கடியைத் தீர்க்கும் பணியில் ஈடுபட விரும்புவதாகத் தெரிகிறது. அமைச்சரவை மாற்றத்தை சாலையில் போராடும் மக்கள் விரும்பவில்லை. அவர்கள் வைத்திருக்கும் பதாகையில், “Resign, not reassign.” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

ஏப்ரல் 4 ஆம் தேதி நீதி துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த மறுநாள் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட அலி சப்ரி, மீண்டும் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். ஆனால் அதிபர் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் தொடர்ந்து நிதியமைச்சராக இருக்கிறார்.

publive-image

நாடாளுமன்றத்தில் மிகக் குறைந்த பெரும்பான்மையைக் கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சே, திங்கட்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் போராட்டக்காரர்கள் வீடு திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதற்கிடையில், நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதமும் சென்றுகொண்டிருக்கிறது.ஆனால், பிரிந்து சென்ற பல கட்சிகளும், எம்.பிக்களும் தங்களது அடுத்த கட்ட நடவடிக்கைகளை குறித்த உறுதியான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கவில்லை.

ராஜபக்சக்களால் தனக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டதாக வெளியான வதந்திகளை விக்கிரமசிங்க மறுத்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணி - விக்கிரமசிங்கவிற்கும் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான கூட்டணி வழங்கிய பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

இதுகுறித்து பேசிய அவர், என்னிடம் கேட்கப்படவில்லை, நான் இருந்திருந்தாலும், நான் வெளியே இருப்பேன், ஏனென்றால் நான் என்ன செய்ய முடியும்? நாடாளுமன்றத்தில் என் கட்சி சார்பில் நான் மட்டுமே இருந்தேன். நிர்வாகத்தை எப்படி நடத்த முடியும்? நாடாளுமன்றத்தில் உங்களுக்கு ஆதரவு எண்ணிக்கை இருக்க வேண்டும். அதிக எண்ணிக்கையிலான கட்சிதான் ஆட்சி அமைக்கும். ஆனால், உணவு நெருக்கடியை எவ்வாறு தணிப்பது என்பது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கியதாக தெரிவித்தார்.

அண்மையில் நடந்து முடிந்த அனைத்து கட்சி கூட்டத்தில் மூன்று யோசனைகளை முன்வைத்ததாக கூறினார்.

அவர் கூறியதாவது, நேரம் சென்றுகொண்டிருக்கிறது. எரிபொருள் தீர்ந்துக்கொண்டிருக்கிறது. உணவும் காலியாகி கொண்டிருக்கிறது. இன்னும், ஏன் IMFவுடன் பேச்சுவார்த்தை நடத்தி காத்திருக்கீறிர்கள். உடனடியாக, உலக வங்கியிடமும், ஏடிபியிடமும் பேசி, என்ன குறுகிய கால உதவியைப் பெற முடியும் என்பதை பாருங்கள்.

இரண்டாவதாக, IMF பேச்சுவார்த்தைகள் முடிந்து, செயல்படுத்தப்படும் வரை, இந்தியா, ஜப்பான், சீனா, தென் கொரியா, ஐரோப்பிய ஒன்றியம் என ஒரு கூட்டமைப்பை உருவாக்கி, அவர்களால் நமக்கு என்ன உதவி கிடைக்கும் என்பதை பார்க்க வேண்டும். மூன்றாவதாக, உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, தெற்காசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளுடன் உணவுக் கடன் வாங்கி, இரண்டு அல்லது மூன்று வருடங்களில் திருப்பி தரும் வகையில் ஏற்பாடு செய்யுங்கள்.

சீனாவிலும் சில உபரி பங்குகள் உள்ளன, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மியான்மர் ஆகிய இடங்கள் உள்ளன, நாம் பார்க்க வேண்டும், ஆனால் தெற்காசியாவுடன் வேலை செய்யத் தொடங்குங்கள் என்றார்.

இந்தியா தனது உதவியை தாராளமாக வழங்கியதாக விக்கிரமசிங்க கூறினார். அவர் பேசுகையில், இந்தியா போதுமானதை விட அதிகமாக செய்துள்ளது.1.5 பில்லியன் டாலர் கொடுத்துள்ளது.வேறு எந்த நாட்டிற்கும் இதுபோன்ற உதவிகளை செய்ததில்லை. அதற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் அவை தீர்ந்துவிடும். எரிபொருள் (கடன் வரி) மே நடுப்பகுதியில் முடிந்துவிடும். மற்ற பொருட்கள், அரிசி எல்லாம் முடிந்துவிடும். பிறகு நாம் என்ன செய்வது?” என கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து சமகி ஜன பலவேகயவை (SJB) அமைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்தபடி, இலங்கையின் சக்திவாய்ந்த அதிபர் முறையை ஒழிப்பது "உடனடி முன்னுரிமை அல்ல" என்றும் விக்கிரமசிங்க நிராகரித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment