Advertisment

இலங்கை விமான நிலையங்களை மீண்டும் திறந்தால் டூரிஸ்ட்களுக்கு 6 மாத விசா வழங்க திட்டம்

இலங்கையில் சர்வதேச விமான நிலையங்களை மீண்டும் திறக்கும்போது, சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் 1 மாத விசாக்களுக்கு பதிலாக 6 மாத விசாக்களை வழங்க இலங்கை அரசு முன்மொழிந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Sri Lanka govt proposed to issue 6-month visas for tourists, இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு 6 மாத விசா, இலங்கை, sri lanka airports, sri lanka airports re-open, coronavirus, covid-19

இலங்கையில் சர்வதேச விமான நிலையங்களை மீண்டும் திறக்கும்போது, சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் 1 மாத விசாக்களுக்கு பதிலாக 6 மாத விசாக்களை வழங்க இலங்கை அரசு முன்மொழிந்துள்ளது.

Advertisment

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பல நாடுகள் சர்வதேச விமானப் போக்குவரத்துகளை நிறுத்தியுள்ளது. இதனால், சுற்றுலாத்துறையின் மூலம் வந்த வருமானமும் தடைபட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் அடுத்த ஆண்டு பயணிகளுக்காக சர்வதேச விமான நிலையங்களை மீண்டும் திறக்கும்போது, சுற்றுலாப் பயணிகளுக்கு தற்போது வழங்கப்படும் 1 மாத விசாக்களுக்கு பதிலாக 6 மாத விசாக்களை வழங்க இலங்கை அரசு முன்மொழிந்துள்ளது என்று திங்கள்கிழமை செய்திகள் வெளியாகி உள்ளது.

இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்னா ரனதுங்கா, இலங்கை சுகாதார மற்றும் சுற்றுலா அமைச்சகம் கோவிட் -19 மருத்துவ முகாம் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட புதிய வழிகாட்டுதல்களை விவாதித்து செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின் இந்த வழிகாட்டுதல்களின்படி, இலங்கையில் குறைந்தபட்சம் 14 நாட்கள் தங்கியிருப்பது கட்டாயமாக்கப்படும். அதே நேரத்தில் ஆன்லைன் விசா விண்ணப்ப முறைப்படி அனைத்து சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கும் ஆன்லைன் விசா விண்ணப்ப முறை - எலக்ட்ரானிக் டிராவல் அங்கீகாரம் (இடிஏ) வழியாக கட்டாயமாக உள்ளது.

இந்த வழிகாட்டுதல்களின்படி, இலங்கையில் முதல் ஏழு நாட்களுக்கு முதல் கட்டமாக (லெவல் 1) ஹோட்டலில் முன்பதிவு செய்யப்பட வேண்டும். முன்பதிவு செய்த பார்வையாளர்களுக்கு மட்டுமே, பின்னர் அடுத்த ஏழு நாட்களுக்கு லெவல் 1 அல்லது லெவல் 2 ஹோட்டலில் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான தங்குமிடம் என சான்றளிக்கப்பட்டு விசாக்கள் வழங்கப்படும்.

விசா கட்டணத்துடன் கூடுதலாக, மூன்று பி.சி.ஆர் அல்லது ஆன்டிஜென் பரிசோதனைகளுக்கான செலவு ஒவ்வொரு பயணிகளிடமிருந்தும் வசூலிக்கப்படும். இலங்கைக்கு வந்தவுடன் ஆன்டிஜென் மற்றும் அல்லது பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படும். அதன் பிறகு, ஐந்து முதல் ஏழு நாட்களுக்குப் பிறகு மற்றொரு பரிசோதனை நடத்தப்படும் இது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுகாதார அதிகாரிகளால் அவசியம் எனக் கருதப்பட்டால், சுற்றுலாப் பயணிகள் வந்த 10 முதல் 14 நாட்களுக்குப் பிறகு கூடுதல் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வரும் அனைத்து பயணிகளும் இலங்கைக்கு வரும் முன்னர் இலங்கையை தளமாகக் கொண்ட காப்பீட்டாளரிடமிருந்து மருத்துவக் காப்பீட்டைப் பெறுவது கட்டாயமாகும்.

இலங்கைக்கு வரும் அனைத்து சர்வதேச சுற்றுலாப் பயணிகளும் வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு பி.சி.ஆர் பரிசோதனைகளில் தொற்று இல்லை என்பதற்கான ஆதாரங்கள் வைத்திருப்பது கட்டாயமாகும். மேலும், அனைத்து பயணிகளும் தங்களுடன் போதுமான எண்ணிக்கையில் முகக்கவசங்களை எடுத்துச் செல்வதோடு அவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

இலங்கையில் முதல் கொரோனா வைரஸ் தொற்று நோயாளில் கண்டறியப்பட்டதை அடுத்து, அந்நாட்டு சர்வதேச விமான நிலையங்கள் மார்ச் மாதம் மூடப்பட்டது. அதற்குப் பிறகு, இலங்கை அரசு அடுத்த மாதம் தனது சர்வதேச விமான நிலையங்களை மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கிறது. தற்போது, இலங்கை அரசு அந்நாட்டு குடிமக்களை அனுப்புவதற்கு மட்டுமே திறந்து வைத்துள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Sri Lanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment