இலங்கை சுதந்திர தினத்தில் தேசிய கீதம் தமிழில் பாடப்படாது… சர்ச்சை!

இலங்கை சுதந்திர தினத்தில் அந்நாட்டின் தேசிய கீதத்தை தமிழில் பாடுவதை கைவிட உள்ளதாக இலங்கை பொது நிர்வாக அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால், இலங்கை தமிழர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

By: January 12, 2020, 9:12:00 PM

இலங்கையில் சிங்களத்தைப் போல, தமிழ் மொழியும் அலுவலக மொழி என்று அறிவிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆன பிறகு, அந்நாட்டின் சுதந்திர தினத்தில் இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாடுவதை கைவிட உள்ளதாக இலங்கை பொது நிர்வாக அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால், இலங்கை தமிழர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நல்லாட்சி, தமிழ் சிறுபான்மை மக்களுடன் நல்லிணக்கத்திற்கான வாக்குறுதியின் பேரில், அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஒரு ஆண்டு கழித்து மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு நடைமுறையை மாற்றப்படுகிறது.

இலங்கையில் 1949-க்குப் பிறகு, பிப்ரவரி 4, 2016 அன்று, அந்நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டங்களில் முதன்முறையாக தமிழில் இலங்கை தேசிய கீதம் பாடப்பட்டது. இதற்கு முன்பு, முந்தைய-சிலோன் சுதந்திரம் பெற்று ஒரு வருடம் கழித்து கடைசியாக பாடப்பட்டது.

இலங்கையில் பல தமிழர்கள் இதை ஒரு முக்கியமான அடையாள ரீதியாக, சிறுபான்மை தமிழர்களுக்கு எதிரான அரசின் கொள்கையில் இருந்து விலக்குவது என்பதற்கான அறிகுறியாகக் கருதுகின்றனர்.

இப்போது, கோத்தபய ராஜபக்க்ஷவின் பெரிய தேர்தல் வெற்றிக்குப் பிறகு நடந்த முதல் சுதந்திர தின கொண்டாட்டத்தில், தெற்கு சிங்கள பௌத்த பெரும்பான்மையினரின் தீர்க்கமான கட்டாயத்தால் தமிழ் தேசிய கீதத்தை பாடுவது கைவிடுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த விவகாரத்தில் மாறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளிலிருந்து வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன. “எங்களிடம் ஒரே ஒரு தேசிய கீதம் மட்டுமே உள்ளது. அதை இரண்டு மொழிகளில் பாட எந்த காரணமும் இல்லை என்று அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் ரமேஷ் பதிரானா இலங்கை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழர்கல் சிலர், இந்த முடிவு பல தசாப்தங்களாக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள தமிழர்களின் வாழ்க்கையில் சிறிய ஸ்தூலமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறுகின்றனர்.

தமிழர்களின் பார்வையில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டபோது, 2009-ல் போர் முடிவடைந்ததிலிருந்து அவர்களின் அரசியல் கோரிக்கைகளில் உறுதியான நடவடிக்கை அல்லது முன்னேற்றம் இல்லாத நிலையில் இது சிறந்த அடையாள ரீதியான முன்னேற்றமாக கருதப்பட்டது.

இலங்கை அரசின் இந்த முடிவு குறித்து, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வழக்கறிஞரும் மூத்த விரிவுரையாளருமான கே.குருபரன், “சிங்கள மொழியில் 6.9 மில்லியன் மக்கள் தேசிய கீதம் பாட விரும்புகிறார்கள் என்ற வாதம் பொதுவில் மௌனமாக கிடக்கிறது” தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கையை தாம் கண்டதாக தமிழ் தேசிய கூட்டணி (டி.என்.ஏ) செய்தித் தொடர்பாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, இரு சமூகங்களைச் சேர்ந்த மக்களிடையே உள்ள இடைவெளியை விரிவுபடுத்த கோத்தபய ராஜபக்க்ஷ நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார். மேலும், “தமிழர்கள் தேசிய கீதம் பாடக்கூடாது என்று அரசாங்கம் விரும்பினால், அதைப் பாடாததில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்” என்று சுமந்திரன் கூறினார்.

இந்த விவகாரத்தில் இந்தியாவையும் அதன் தேசிய கீதத்தை குறிப்பிட்டு மற்றொரு வாதமும் முன்வைக்கப்படுகிறது. அதில், பல மொழிகள் இருந்தபோதிலும், இந்தியா தேசிய கீதத்தை ஒரே மொழியில் பாடும்போது, இலங்கைக்கு ஏன் இரண்டு மொழிகளில் இருக்க வேண்டும் என்று சிலர் கேட்டார்கள். ஆனால், இங்கே சூழல் மிகவும் வித்தியாசமானது. அதற்கு, இலங்கையில் இன மோதலின் வரலாற்றை சுட்டிக்காட்டுகின்றனர். இதில் தமிழ் மொழி அல்லது அதை அங்கீகரிக்க மறுப்பது மீண்டும் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. தேசிய கீதத்தின் தமிழ் பதிப்பான ‘இலங்கை தாயே’ என்பது வட்டுகோட்டை கவிஞர் நல்லதம்பியின் மொழிபெயர்ப்பாகும். ரவீந்திரநாத் தாகூரின் சீடரான ஆனந்த சமரக்கூன் இசையமைத்த சிங்கள அசல் ‘இலங்கை மாதா’ போலவே இது ஒலிக்கிறது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் குறுக்கிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், ஜனாதிபதி கோத்தபய ராஜபக்க்ஷ நாட்டின் ஏழு மில்லியன் வாக்குகளைப் பெற்றார். “85% தமிழ் மக்கள், எங்கள் அழைப்பின் பேரில், அவருக்கு எதிராக வாக்களித்தனர்; அவர்களால் அவர்களுடைய வாக்குகளைப் பிடிக்க முடியவில்லை. நீங்கள் அவர்களின் வாக்குகளை லட்சியம் இல்லாமல் பெற முடியாது; அவர்களின் வாக்குகளை நீங்கள் கைக்கூலிகளால் பிடிக்க முடியாது. தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகள், அவர்களின் நாகரிகம், மரபுகள், அவர்களின் மொழி, கலாச்சாரம், அவர்களின் கண்ணியம் மற்றும் சுய மரியாதை ஆகியவற்றைப் புரிந்துகொள்ளும் மக்களின் ஆதரவோடு மட்டுமே நீங்கள் அவர்களின் வாக்குகளைப் பெறுவீர்கள். அதுவே அடிப்படை.” என்று கூறினார்.

இலங்கையின் 2020ஆம் ஆண்டு சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம், தமிழ் மொழியில் பாட மறுப்பு தெரிவிக்கப்பட்டமையானது, தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாரிய பாதிப்பான விடயம் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தேசிய கீதத்தைத் தமிழ் மொழியில் பாட முடியாது என்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை வன்மையாகக் கண்டிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கின்றது.

மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராமலிங்கம் சந்திரசேகரன் கூறுகையில், “தேசிய கீதம் இலங்கை அரசியலமைப்பில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தேசிய கீதத்தைச் சிங்கள மொழியில் மாத்திரம் பாடுவது என்ற தீர்மானமானது, நாட்டிலுள்ள இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் ஒரு விடயம். இது இன நல்லிணக்கத்திற்கோ அல்லது மத நல்லிணக்கத்திற்கோ சாதகமான ஒன்றல்ல. இலங்கை அரசாங்கத்தின் இந்த தீர்மானமானது, இனவாத, மதவாத செயற்பாடுகள் மாத்திரமன்றி, ஒரு இனத்தின் மேலாதிக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு செயற்பாடு. இனவாத, மதவாத செயற்பாடுகளை முன்னோக்கிக் கொண்டு சென்று, தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாகவே தான் இதனை கருதுகிறேன்.” என்று கூறினார்.

இலங்கையின் இரு அலுவலக மொழிகளிலும் தேசிய கீதம் பாட அனுமதிப்பது வெறுமனே அடையாள ரீதியானதாக இருக்கலாம். ஆனால், அடையாள ரீதியான குறியீட்டு நடவடிக்கைகள் பெரும்பாலும் அவற்றைச் சேர்ப்பதைவிட வேண்டுமென்றே விடுபடுவதில் அதிக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sri lanka independence day national anthem not singing in tamil controversy

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X