இலங்கை விவகாரம் : அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்ட வலியுறுத்தும் வெளிநாடுகள்

விரைவில் நாடாளுமன்றத்தை கூட்ட மைத்ரிபால சிறிசேனாவை வலியுறுத்திய ஐநா...

Sri Lanka Politics Latest Updates : இலங்கை அரசியலில் மிகப் பெரும் திருப்பமாக அமைந்திருந்தது இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்றது. இந்நிலையில் இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், நாடாளுமன்றத்தின் மாண்பினை காப்பது அதிபரின் கடமை என்றும் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா கூறியிருக்கிறார். இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க

பெட்ரோலியத்துறை அமைச்சர் அர்ஜூனா ரணதுங்காவின் பாதுகாப்புக் காவலர், ராஜபக்சேவின் ஆதரவாளர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டது பெரும் பரபரப்பை கிளப்பியது. அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்டதிற்காக அர்ஜூனா ரணதுங்காவினை நேற்று கைது செய்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் பல நாடுகளும் இந்த அரசியல் மாற்றங்களால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Sri Lanka Politics Latest Updates – அமெரிக்காவின் வேண்டுகோள்

ஐரோப்பிய தேசங்கள் மற்றும் அமெரிக்காவின் அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கியத் தலைவர்கள் இலங்கையில் நடக்கும் அரசியல் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.  நாடாளுமன்றத்தை விரைவாக கூட்டி “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம், யார் பெரும்பான்மை பெறுகிறார்களோ அவர்களை பிரதமராக்குவது தான் சரி”  என சிறிசேனாவிற்கு அறிவுரை வழங்கியிருக்கிறார் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹீத்தர் நௌரத் கூறியிருக்கிறார்.  மேலும் வன்முறையில் இருந்து பொதுமக்கள் ஒதுங்கி இருப்பது நலம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

கனடா

கனடா, இலங்கையில் நடைபெற்று வரும் அரசியல் மாற்றங்களை கவனித்து வருகிறது. அனைத்துக் கட்சிகளும் வன்முறைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளித்து நடக்க வேண்டும் என அறிக்கை விடுத்துள்ளது.

அதனை இலங்கைக்கான கனடா நாட்டுத் தூதுவர் டேவிட் மெக்கென்னர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருக்கிறார். கனடா நாட்டு தலைவர் மைத்ரிபால சிறிசேனாவிற்கு அழைப்புவிடுத்து மிக விரைவில் நாடாளுமன்றத்தை கூட்டச் சொல்லி வழியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை

ஐநாவின் தலைவர் ஆண்டனியோ குடெரஸ் “அரசியல் சாசனத்தை மதித்து செயல்படுதல் நலம் என்றும் சட்ட ஒழுங்கினை சீர்படுத்தி அனைத்து இலங்கை மக்களுக்குமான பாதுகாப்பினை உறுதி செய்ய அந்நாடு முயற்சிக்க வேண்டும்” எனவும் அவர் கூறிக் கொண்டார்.

இங்கிலாந்து

சபாநாயகருடன் ஆலோசனை செய்து, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களின் கடமையை சரிவர செய்ய, இலங்கையின் நாடாளுமன்றம் உடனே கூட்டப்பட வேண்டும் என இங்கிலாந்து வலியுறுத்தல்.  இங்கிலாந்து நாட்டின் ஆசிய மற்றும் பசிஃபிக் பிராந்திய அமைச்சர் மார்க் ஃபீல்ட், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவிற்கு வலியுறுத்திருக்கிறார்.

மேலும் படிக்க : இரண்டாம் தேதி கூடுகிறதா இலங்கை நாடாளுமன்றம் ?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close