Advertisment

இலங்கை அதிபர் தேர்தல் 2019 : ‘வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’ - வருந்தும் சிறுபான்மையினர்!

கடந்த தேர்தலில் சிங்கள வாக்குகள் அதிகமாக பெற்றிருந்தாலும், சிறுபான்மையினரின் வாக்குகள் காரணமாக தோல்வியை தழுவினார் கோத்தபய ராஜபக்‌ஷே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sri Lanka president elections 2019

Sri Lanka president elections 2019

 Arun Janardhanan

Advertisment

Sri Lanka president elections 2019 : இன்று இலங்கையில் அதிபருக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 15 மில்லியன் இலங்கை குடிமக்கள் வாக்களித்து தங்களின் அதிபரை தேர்வு செய்ய உள்ளனர்.  35 போட்டியாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில் தமிழ் மக்கள் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் மிகவும் முக்கியமான திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினர் கடந்த 2015ம் ஆண்டு தேர்தலின் போது மைத்ரிபால சிறிசேனாவுக்கு தங்களின் ஆதரவை பதிவு செய்தனர். இம்முறை யாருக்கு வாக்களிப்பார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு பேட்டி அளித்த தமிழர்கள் பலரும் “கடந்த ஐந்தாண்டுகளில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது” என்பதை தெரிவித்தனர். மேலும் தமிழ் தேசிய கூட்டணி (Tamil National Alliance (TNA)) சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்கள் மீது தமிழ் மக்கள் அதிருப்தியாய் இருப்பதாகவும், அதனால் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாகவும் அவர்கள் அறிவித்தனர்.

2015ம் ஆண்டு தேர்தலின் போது சிறுபான்மையினர் பலரும் சிறிசேனாவுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர். அதே போன்று 47.6% சிங்கள புத்த மதத்தை சேர்ந்த மக்கள் கோத்தபய ராஜபக்‌ஷேவுக்கு தங்களின் ஆதரவை அளித்தனர். இன்றைய அரசியல் சூழலில் யார் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று தெரியவில்லை. ஒருங்கிணைந்த தேசிய கட்சி வேட்பாளார் சாஜித் ப்ரேமதாசாவுக்கு எவ்வளவு வாக்குகள் பதிவாகும் என்பது குறித்து பலருக்கும் கருத்துகள் இல்லை.

தமிழ் தேசிய கூட்டணியின் செய்தி தொடர்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் கூறுகையில், அதிபர் சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இருவரும் கூறிய வாக்குறுதிகள் முறையாக நிறைவேற்றப்படவில்லை. போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மக்கள் தங்களின் வாக்கினை சாஜித்துக்கு அளிப்பார்கள் என்று கூறினார் சுமந்திரன். 2015ம் ஆண்டு தமிழ் மக்களிடம் தேர்தல் குறித்து இருந்த அதே எண்ணவோட்டம் இப்போதும் இருக்குமா என்று தெரியவில்லை. சில மக்கள் தமிழ் தேசிய கூட்டணியின் செயல்பாடுகளில் திருப்தி அடையாமல் இருக்கின்றனர் என்பதும் எங்களுக்கு தெரியும் என்றும் கூறினார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவலிங்கம் தற்போதைய குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளாராக உள்ளார். தமிழ் மக்கள் நிச்சயமாக சாஜித்திற்கோ கோத்தபயவிற்கோ தங்களின் ஆதரவை தரமாட்டார்கள். கிழக்கு மாகாணம் கோத்தபயவுக்கு தன்னுடைய ஆதரவை தரும் என்றும், சாஜித் வடக்கு மாகாணத்தில் அதிக வாக்குகள் பெறுவார் என்றும் கூறினார்.  கடந்த தேர்தலில் சிங்கள வாக்குகள் அதிகமாக பெற்றிருந்தாலும், சிறுபான்மையினரின் வாக்குகள் காரணமாக தோல்வியை தழுவினார் கோத்தபய ராஜபக்‌ஷே என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment