Advertisment

சகோதரர் மகிந்த ராஜபக்சே-வை பிரதமர் பதவியிலிருந்து நீக்க இலங்கை அதிபர் ஒப்புதல்

இலங்கையில் அதிகமாகும் நெருக்கடி; சகோதரர் மகிந்த ராஜபக்சேவை பிரதமர் பதவியிலிருந்து நீக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒப்புதல்

author-image
WebDesk
New Update
சகோதரர் மகிந்த ராஜபக்சே-வை பிரதமர் பதவியிலிருந்து நீக்க இலங்கை அதிபர் ஒப்புதல்

Lawmaker: Sri Lanka president agrees to remove brother as PM: இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட அரசியல் முட்டுக்கட்டையைத் தீர்ப்பதற்காக முன்மொழியப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் தனது சகோதரர் மகிந்த ராஜபக்சேவை பிரதமர் பதவியிலிருந்து நீக்க இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒப்புதல் அளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும், புதிய பிரதமரை தெரிவுசெய்வதற்கு தேசிய சபைக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும், புதிய இடைக்கால அமைச்சரவையில் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய அமைச்சரவையை நியமிக்கவும் அதிபர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அதிபரைச் சந்தித்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ராஜபக்சேவுக்கு முன் அதிபராக இருந்த சிறிசேன, இந்த மாத தொடக்கத்தில் கிட்டத்தட்ட 40 சட்டமன்ற உறுப்பினர்களுடன் விலகி ஆளும் கட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றார்.

இலங்கை திவால்நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது மற்றும் வெளிநாட்டு கடன்களுக்கான திருப்பிச் செலுத்தல்களை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு 7 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனையும், 2026க்குள் 25 பில்லியன் டாலரையும் திருப்பிச் செலுத்த வேண்டும். ஆனால் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 1 பில்லியன் டாலருக்கும் குறைவாக உள்ளது.

இதையும் படியுங்கள்: இலங்கைக்கு உதவ தமிழக சட்டமன்றம் தீர்மானம்: சொந்த பணத்தில் ரூ50 லட்சம் வழங்குவதாக ஓ.பி.எஸ் அறிவிப்பு

அன்னிய செலாவணி பற்றாக்குறை இறக்குமதியை கடுமையாக பாதித்துள்ளது, உணவு, எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள அனைத்து மாற்றங்களிலும் பிரதமர் மகிந்த ராஜபக்சே உட்பட ராஜபக்சேவும் அவரது குடும்பத்தினரும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். தற்போது ராஜபக்சேக்களுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Srilanka World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment