Advertisment

இலங்கை அதிபர், பிரதமர் மாளிகையில் 1000 கலைப்பொருட்கள் மிஸ்ஸிங்!

இலங்கையின் ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து காணாமல் போன 1,000 தொல்பொருட்கள் போராட்டக்காரர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன: போலீசார்

author-image
WebDesk
New Update
இலங்கை அதிபர், பிரதமர் மாளிகையில் 1000 கலைப்பொருட்கள் மிஸ்ஸிங்!

Over 1,000 artefacts missing from Sri Lanka’s Presidential Palace and PM’s official residence taken over by protesters: Police: இலங்கையின் ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகையில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து இந்த மாத தொடக்கத்தில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்நுழைந்ததை அடுத்து, பழங்கால மற்றும் தொல்பொருள் பொருட்கள் உட்பட 1,000 க்கும் மேற்பட்ட மதிப்புமிக்க கலைப்பொருட்கள் காணாமல் போயுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisment

ஜூலை 9 அன்று, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரின் வீடுகளை ஆக்கிரமித்த பின்னர் அவர்களின் வளாகத்திற்குள் நுழைந்து கட்டிடங்களில் ஒன்றிற்கு தீ வைத்து எரித்தனர்.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து அரிய தொல்பொருட்கள் உட்பட குறைந்தது 1,000 பெறுமதியான பொருட்கள் காணாமல் போயுள்ளதாக போலீஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு பக்கம் என்ற இணையதள செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விசாரணையை தொடங்க சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள போதிலும், ஜனாதிபதி மாளிகையில் உள்ள பழம்பொருட்கள் மற்றும் பல்வேறு தொல்பொருட்கள் பற்றிய விரிவான பதிவுகள் இலங்கை தொல்பொருள் துறையிடம் இல்லை என்பது இதனை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரிகளின் வேதனையை அதிகரித்துள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

1000க்கும் அதிகமான பழங்காலப் பொருட்கள் காணாமல் போயிருக்கலாம் என போலீசார் கணித்த போதிலும், அவற்றின் எண்ணிக்கை குறித்த துல்லியமான மற்றும் தெளிவான தகவல்களைப் பெறுவது கடினம் என தொல்பொருள் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் ஞாயிறு லங்காதீப பத்திரிகைக்கு தெரிவித்தார்.

புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கான உரிமையை மதிப்பதாகத் தெரிவித்த அவர், ஜனாதிபதி மாளிகை அல்லது பிரதமரின் தனிப்பட்ட இல்லம் போன்ற அரச கட்டிடங்களை ஆக்கிரமிக்க இடமளிக்கப் போவதில்லை என்று உறுதியளித்துள்ளார். மக்கள் பொது இடங்களை முற்றுகையிடுவதையும், பாராளுமன்றத்திற்கு இடையூறு செய்வதையும் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இலங்கையின் ஆயுதப் படைகளுக்கும் காவல்துறையினருக்கும் தாம் அதிகாரம் அளித்துள்ளதாக விக்கிரமசிங்கே கூறினார்.

"பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றம் அவர்களின் கடமையை நிறைவேற்றுவதைத் தடுக்காதீர்கள்" என்று ரணில் விக்கிரமசிங்கே இந்த வாரம் கூறினார்.

வெள்ளிக்கிழமை விடியற்காலைக்கு முந்தைய தாக்குதலில், பல அரசாங்க அலுவலகங்கள் அமைந்துள்ள காலே முகத்திடலில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் தளத்தை இலங்கை பாதுகாப்புப் படையினர் தாக்கினர், குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment