இலங்கை புதிய பிரதமர் விவகாரம் : முக ஸ்டாலின் கேள்வி...

இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் கருத்துகள் என்ன ?

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே : 2015ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் மைத்ரிபால சிறிசேனவின் இலங்கை சுதந்திர கட்சியும் கூட்டணியாக ஆட்சி அமைத்தன.

இந்நிலையில் அந்த கூட்டணியில் இருந்து சிறிசேனாவின் கட்சி விலகிக் கொள்ள, பதவியை இழந்தார் ரணில் விக்ரமசிங்கே. இதனைத் தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த ராஜபக்ச.  இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின் 19வது பிரிவின் படி ஆட்சியில் உள்ள பிரதமரை நீக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என்றும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தால் மட்டுமே பிரதமர் பதவி இழக்க நேரிடும் என்றும் ரணில் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். மேலும் அதிபரின் முடிவுக்கு இலங்கை அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ரணில் விக்ரமசிங்கேவின் பதவி நீக்கத்திற்கும் மகிந்த ராஜபக்சே புதிய பிரதமராக பதவியேற்றதிற்கும் இந்தியாவின் பங்கீடு இருப்பதாக பல்வேறு விதமான கருத்துகள் நிலவி வருகின்றன. ஆனால் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இது குறித்து மௌனமாக இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

03:00 PM : முக ஸ்டாலின் கேள்வி

இலங்கையில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் குறித்தும், 7 தமிழர்களின் விடுதலை தொடர்ந்து தள்ளிப் போவதும் இந்திய அரசின் கவனத்திற்கு அப்பாற்பட்டதா என்று கேள்வி !

01:00 PM : இலங்கை நாடாளுமன்றம்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க விரும்பினார் ரணில் விக்ரமசிங்கே. ஆனால் இன்று மதியம் 12 மணியில் இருந்து நாடாளுமன்றம் முடித்து வைக்கப்படுவதாக இலங்கை நாடாளுமன்ற செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார். நவம்பர் 16ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

10: 30 AM : வைகோ அறிக்கை

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இலங்கையின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ராஜபக்சேவின் பதவியேற்பினை  “இனப்படுகொலைக் குற்றவாளி பதவியேற்பு தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்த வேல்” என்று விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க

10: 00 AM சட்டத்தின் உதவியை நாடும் ரணில் விக்ரமசிங்கே

இலங்கை அரசியல் அமைப்பு சாசனம் 19ன் படி ஆட்சியில் இருக்கும் பிரதமரை நீக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இல்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இழந்தால் மட்டுமே ஒருவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்க இயலும்.

225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் சிறிசேனா மற்றும் ராஜபக்சே கட்சியை சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 95. ரணில் விக்ரமசிங்கேவின் கட்சியில் 106 உறுப்பினர்கள் உள்ளனர்.

பெரும்பான்மையினை நிரூபிக்க அவருக்கு 7 இடங்கள் மட்டுமே தேவை. சிறிசேனாவின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து நீதிமன்றத்தை நாடப் போவதாக அந்நாட்டு பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

09:45 AM ஒரு நாட்டிற்கு இரண்டு பிரதமர்களா ?

இந்த நிமிடம் வரை நான் தான் பிரதமர் என ரணில் விக்ரமசிங்கே கூறிவருகிறார். பொதுமக்கள் சிலர் இலங்கைக்கு இரண்டு பிரதமரா என்று கேள்வி எழுப்பி ட்வீட் செய்து வருகிறார்கள்.

09:30 AM பிரதமரான ராஜபக்சேவினை உற்சாகமாக வரவேற்ற தொண்டர்கள்

09:15 AM : அரசியல் சாசனப்படி இந்த பதவியேற்பு தவறு – மங்கள சமரவீரா

இலங்கையின் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரா, ராஜபக்சேவினை பிரதமராக அறிவித்தது இலங்கை அரசியல் சாசனத்திற்கு முற்றிலும் எதிரானது மற்றும் சட்டத்திற்கு புறம்பானது என கருத்து பதிவு செய்திருக்கிறார்.

 

09:00 AM:  கோத்தாபய  ராஜபக்சேவின் கருத்து

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய ராஜபக்சேவின் சகோதரர் நந்தசேன கோத்தாபய ராஜபக்ச தன்னுடைய வாழ்த்துகளை முகநூலில் பதிவு செய்திருக்கிறார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close