Advertisment

நீர் வீழ்ச்சியில் விழுந்த குட்டி யானையை காப்பாற்றச் சென்ற 11 யானைகள் உயிரிழப்பு... தாய்லாந்தில் நடந்த சோகம்!

1992ம் ஆண்டு இதே நீர் வீழ்ச்சியில் 8 யானைகள் விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thailand baby elephant drowned in a waterfall

Thailand baby elephant drowned in a waterfall

Thailand baby elephant drowned in a waterfall :  தாய்லாந்து நாட்டின் பேங்காங்கிற்கு வடகிழக்கே 85 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது காவ் யாய் தேசிய பூங்கா. அங்கு இருக்கும் ஹியாவ் நாரோக் என்ற நீர் வீழ்ச்சியில் அருகே 3 வயது மதிக்கத்தக்க குட்டி யானை ஒன்று கீழே விழுந்துவிட்டது. அதனை காப்பாற்ற அதன் குடும்ப யானைகள் ஒவ்வொன்றாக அந்த பள்ளத்தில் இறங்க, நீரில் மூழ்கி அவையும் உயிரிழந்தன. ஒரு குட்டியானையை காப்பாற்றச் சென்று 5 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தாக நேற்று காலை அறிவிக்கப்பட்டது. வனத்துறையினர் பின்னர் மேற்கொண்ட ஆய்வின் போது அந்த நீர்வீழ்ச்சியின் நீரில் மூழ்கி 11 யானைகள் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இரண்டு யானைகள் அங்கு சுற்றித்திருந்ததை கண்டறிந்த வனத்துறையினர் அங்கு நடந்தது என்ன என்று கண்டறியும் போது இந்த உண்மை புலப்பட்டுள்ளது. நீர் வீழ்ச்சியின் கீழே சுற்றிக் கொண்டிருந்த இரண்டு யானைகளை மட்டும் உயிருடன் மீட்டு அவைகளுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆறு யானைகளின் மறைவைத் தொடர்ந்து நாரோக் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகளின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Thailand baby elephant drowned in a waterfall Thailand baby elephant drowned in a waterfall

காவ் யாய் தாய்லாந்து நாட்டின் மிகப்பெரிய மூன்றாவது உயிரியல் பூங்கா இதுவாகும். நாரோக்கின் மொத்த உயரம் 492 அடியாகும். யானைகள் ஒன்றுக்கு ஒன்று உதவும் குணம் படைத்தவகள் என்பதால் இந்த நிகழ்வு அனைவர் மனதிலும் பெரும் பாதிப்பினை உருவாக்கியுள்ளது. இதற்கு முன்பு 1992ம் ஆண்டு 8 யானைகள் தங்கள் குழுவில் வசிக்கும் ஒற்றை யானையை காப்பற்ற போய் இதே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : சத்தியமா இது வரிக்குதிரை தாங்க... புகைப்பட கலைஞர்களை ஈர்க்கும் டிரா

Thailand
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment