Advertisment

லெபனானில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடி விபத்து... சிக்கியவர்களின் நிலை என்ன?

லெபனானின் சுப்ரீம் டிஃபென்ஸ் கவுன்சில், இந்த விபத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. 

author-image
WebDesk
New Update
The major blast occurred near the port area in Beirut

The major blast occurred near the port area in Beirut, Lebanon : லெபனான் வெடிமருந்து கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று நிகழ்ந்த சம்வத்தில் எத்தனை பேர் பலியானார்கள் என்ற நிலவரம் இன்னும் தெரியவில்லை. செஞ்சிலுவை சங்கம், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. லெபனான் தலைநகரம் பெய்ரூட்டில் நிகழ்ந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் இந்த விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

6 ஆண்டுகளாக 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் முறையான பாதுகாப்பு அம்சங்கள் ஏதும் இன்றி இங்கு சேமித்து வைத்ததன் விளைவாக இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. நிறைய கட்டிடங்கள் சேதாரம் அடைந்திருப்பதால் இழப்புகள் அதிகமாயிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் வெறும் புகையை மட்டுமே கக்கிக் கொண்டிருந்த அந்த பகுதி சிறிது நொடிகளில் வெடித்து சிதறியது. தொலை தூரத்தில் இருந்து இந்த நிகழ்வை வீடியோ எடுத்தவர்களும் அதன் அதிர்வை உணர்ந்தனர்.

லெபனானின் சுப்ரீம் டிஃபென்ஸ் கவுன்சில், இந்த விபத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

International News Lebanon
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment