இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இந்த பரிசை மூவரும் பிரித்துக் கொள்வார்கள் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளைச்சேர்ந்த ஆர்தர் ஆஸ்கின், ஜிரார்டு மவுரு, டோனோ ஸ்டிக்லாண்டுவுக்கு ஆகியோருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு :

இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டு  நோபல் பரிசு அறிவிப்புகள் தொடங்கின.

நேற்றைய  தினம், மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அவிக்கப்பட்டது. மருத்துவ விஞ்ஞானி ஜேம்ஸ் பி.அலீசன், மற்றும் ஜப்பானின் தசுகோ ஹோன்ஜோ ஆகியோருக்கு 2018-ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு கிடைத்தது.

இந்நிலையில், தற்போது அமெரிக்கா, பிரான்ஸ், கனடாவை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான  நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

லேசர் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பில் ஈடுபட்டதற்காக அமெரிக்காவை சேர்ந்த ஆர்தர் அஷ்கின், பிரான்சை சேர்ந்த ஜெரார்டு மவுரு, கனடாவை சேர்ந்த டோனோ ஸ்டிரிக்லேண்ட் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த பரிசை மூவரும் பிரித்துக் கொள்வார்கள் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்தர் அஷ்கின்: 

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த இவர்,  ”ஆப்டிகல் டிவீசர்ஸ்” எனப்படும் லேசர் தொழில்நுட்பத்தில் நிகழ்த்திய கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெறுகிறார். பரிசு தொகையான 6.5 கோடி ரூபாயில் 50 சதவிகிதத்தை இவர் பெறுகிறார்.

ஜெரார்டு மவுரு : 

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜெரார்டு மவுரு லேசர் துறையில் அதிக திறன் கொண்ட மிக மெல்லிய லேசர் அதிர்வுகளை உருவாக்கிய காரணத்திற்காக நோபல் பெறுகிறார். பரிசுத் தொகையில் 25 சதவிகிதத்தை பெறுவார் என்று தெரிகிறது.

டோனோ ஸ்டிரிக்லேண்ட் :

கனடாவை சேர்ந்த டோனோ ஸ்டிரிக்லேண்ட்  லேசர் தொழில்நுட்பத்திற்காகத்தான் விருது பெறுகிறார். அதி நுண்ணிய லேசர் அதிர்வுகளை எப்படி இயக்க வேண்டும் என்று வழிகளை உருவாக்கியதற்காக அவருக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  இவரும் இந்த 6.5 கோடி ரூபாயில் 25 சதவிகிதத்தை பெறுவார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close