செல்ல மகளின் பிறந்தநாளுக்கு கோடி ரூபாய் செலவில் பரிசுகளை குவித்த இரண்டு தந்தைகள்

ஒரு பெண்ணிடமிருந்து கருமுட்டையை தானம் வாக்கி, மற்றொரு பெண்ணின் கருப்பையில் செலுத்தி பிறந்த குழந்தைதான் 18 வயது சாஃப்ரான்.

மகள் என்றாலே அப்பாக்களுக்கு கொள்ளை பிரியம்தான். அவர்கள் எதைக்கேட்டாலும் உடனேயே வாங்கி தந்துவிடுவார்கள்.

அப்படித்தான் இங்கிலாந்தில் தன் 18 வயது மகளுக்கு அவர் விரும்பியதையெல்லாம் வாங்கி தந்திருக்கின்றனர் தந்தைகள். அவர்கள் வாங்கி தந்த பொருட்கள், அவற்றின் விலையை கேட்டால் உங்களுக்கு ”ஒருநிமிஷம் தலை சுத்திடும்.

பாலிவுட் நடிகை, பாப் பாடகிகளின் வீட்டில் கூட இந்தளவுக்கு பொருட்கள் இருக்காது போல. உயர்தர ஆடைகள், ஆடைகளுக்கேற்ற காஸ்ட்லி காலணிகள், ஷூக்கள், அணிகலன்கள், கிட்டத்தட்ட மூன்றே முக்கால் கோடியில் மோதிரம் என எல்லாவற்றையும் வாங்கி குவித்துள்ளனர் தன் அன்பு மகள் சாஃப்ரான் ட்ரூவிட் பார்லோவுக்கு.

தந்தை என்றுதானே சொல்ல வேண்டும். அதென்ன தந்தைகள் என்கிறீர்களா? பேரி – டோனி புரூயிட் பார்லோ என்ற இரு ஆண்களுக்கு பிறந்த குழந்தைதான் சாஃப்ரான். அவர் பிறந்தபோதே உலகம் முழுவதும் ஊடகங்களில் தலைப்பு செய்தியானார். பேரி – டோனி புரூயிட் பார்லோதான் வாடகைத்தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்த முதல் ஓரின சேர்க்கையாளர்கள். அதாவது, ஒரு பெண்ணிடமிருந்து கருமுட்டையை தானம் வாக்கி, மற்றொரு பெண்ணின் கருப்பையில் செலுத்தி பிறந்த குழந்தைதான் சாஃப்ரான். இவர்களுக்கு சாஃப்ரான் தவிர இரட்டை மகன்கள் உட்பட நான்கு மகன்கள் உண்டு.

மேலும், குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் திட்டத்திலும், பேரி – டோனி இருக்கின்றனர்.

சாஃப்ரானின் 18-வது பிறந்தநாளுக்குதான் தந்தைகள் இருவரும் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பில் வார்ட்ரோப் அமைத்து பரிசளித்திருக்கின்றனர். இதுதவிர சாஃப்ரானின் பாக்கெட் மணி எவ்வளவு தெரியுமா? மாதம்தோறும் ரூ.4 லட்சம்.

தந்தைகள் இருவரும் இப்படி பிரம்மாண்ட பரிசுகளை வாங்கி தந்ததால் சாஃப்ரான் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

தங்களிடம் உள்ள சொத்துகளில் பெருமளவை ஆதரவற்ற இல்லங்களுக்கு எழுதிக்கொடுப்பதில்தான் இந்த தந்தைகள் இருவரும் ஆர்வம் காட்டுகின்றனர். பிள்ளைகள் அனைவரும் சொந்த காலில் உழைத்து வாழ்வில் உயர வேண்டும் என்பதே இவர்களது விருப்பமாக உள்ளது.

நகைகள் மட்டுமா? 12 லட்ச ரூபாய் செலவில் காஸ்மெட்டிக்ஸ், ஸ்கின்கேர் ப்ராடக்ட்ஸ் இன்னும் என்னென்னமோ பரிசளித்திருக்கின்றனர் தன் அன்பு மகளுக்கு இந்த தந்தைகள்.

×Close
×Close